மாவட்ட செய்திகள்

ஓரின சேர்க்கைக்கு ஆதரவான தீர்ப்பு: ‘இனி எங்களது மகன் குற்றவாளி அல்ல’ + "||" + Judgment in favor of gay: Our son is not guilty anymore

ஓரின சேர்க்கைக்கு ஆதரவான தீர்ப்பு: ‘இனி எங்களது மகன் குற்றவாளி அல்ல’

ஓரின சேர்க்கைக்கு ஆதரவான தீர்ப்பு: ‘இனி எங்களது மகன் குற்றவாளி அல்ல’
ஓரினசேர்க்கைக்கு ஆதரவான தீர்ப்பு வெளியான நிலையில், இனி எங்களது மகன் குற்றவாளி அல்ல என்று மும்பையை சேர்ந்த இளைஞரின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
மும்பை,

இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377 நீக்கப்பட்டு ஓரினசேர்க்கை அனுமதிக்கப்பட்டதற்கு ஒரு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு வெளிவந்த நிலையில் மும்பையை சேர்ந்த 25 வயது இளைஞரான அர்னாப் நாண்டி தனது ஓரினசேர்க்கை வாழ்க்கையை பற்றி வெளிப்படையாக தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதி உள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

2 வருடத்துக்கு முன்பு வரை நான் கூண்டிற்குள் அடைபட்டு கிடந்ததை போல் உணர்ந்தேன். எனக்கே என்னை பற்றி சரியாக புரிந்து கொள்ள இயலவில்லை.

என் நண்பர் நிகிலின் பிறந்தநாளின் போது, நான் ஒரு ஓரின சேர்க்கையாளன் என்று சொல்வதற்கு எனக்கு தைரியம் வந்தது. இதை அவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.

அதே நேரத்தில் எனது பெற்றோரிடம் இதை சொல்ல முடியாமல் தயங்கினேன். ஏனெனில் எனது குடும்ப சூழ்நிலை என்னை தடுத் தது. ஆனால் தைரியத்தை வரவழைத்து கொண்டு அவர்களிடம் கூறினேன். என் பெற்றோர் எதிர்க்கவில்லை.

6-ந் தேதி தீர்ப்பு வந்ததும் நான் வீட்டிற்கு வந்தேன். அப்போது, என் அம்மாவும், அப்பாவும் என்னை கட்டிப்பிடித்து கொண்டு எனக்கு வாழ்த்து கூறினார்கள். இனி என் மகன் குற்றவாளி கிடையாது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

எனது தாய் என்னிடம் இனி உனக்கு பெண் பார்க்க வேண்டியது இல்லை. பையன் தான் பார்க்க வேண்டும் என்று கூறினார்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்து உள்ளார். அவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. கோவை கோர்ட்டு வளாகத்தில் ஓரின சேர்க்கைக்கு எதிராக கோ‌ஷம்: மதபோதகர் மீது வழக்கு
ஓரின சேர்க்கைக்கு எதிராக கோவை கோர்ட்டு வளாகத்தில் மதபோதகர் ஒருவர் கோ‌ஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. ஓரின சேர்க்கை தீர்ப்பு: பல தரப்பினரும் வரவேற்பு ஆர்வலர்கள் கொண்டாட்டம்
வயது வந்த 2 பேர் சம்மதித்து அந்தரங்கமாக மேற்கொள்கிற ஓரின சேர்க்கை குற்றம் அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று அளித்த தீர்ப்பை பல தரப்பினரும் வரவேற்று உள்ளனர்.
3. ஓரின சேர்க்கை குற்றமல்ல ; தடைசெய்யும் சட்டப்பிரிவு ரத்து - சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ஓரின சேர்க்கை குற்றமல்ல என சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது. ஓரின சேர்க்கையை தடைசெய்யும் சட்டப்பிரிவு 377 ஐ ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
4. ஓரின சேர்க்கையை குற்றமற்றதாக அறிவிக்கக்கோரும் வழக்கு: ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு முடிவு
ஓரின சேர்க்கையை குற்றமற்றதாக அறிவிக்கக்கோரும் வழக்கை அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்துள்ளது.
5. ஓரின சேர்க்கை வழக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் செயல்பட்டு வருகிற பரோசா அறக்கட்டளையை சேர்ந்தவர், ஆரிப் ஜப்பார்.