மாவட்ட செய்திகள்

மத்திய அரசு சாகர் மாலா திட்டத்தை கைவிட வேண்டும் - விடுதலை வேங்கைகள் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் + "||" + The federal government has to abandon the Sagar Mela project

மத்திய அரசு சாகர் மாலா திட்டத்தை கைவிட வேண்டும் - விடுதலை வேங்கைகள் பொதுக்கூட்டத்தில் தீர்மானம்

மத்திய அரசு சாகர் மாலா திட்டத்தை கைவிட வேண்டும் - விடுதலை வேங்கைகள் பொதுக்கூட்டத்தில் தீர்மானம்
மத்திய அரசு சாகர் மாலா திட்டத்தை கைவிடக்கோரி விடுதலை வேங்கைகள் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி மீனவர் விடுதலை வேங்கைகள் சார்பில் சாகர் மாலா திட்டத்தை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

புதுவை செஞ்சி சாலை பாரதிதாசன் திடலில் நடைபெற்ற கூட்டத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி விடுதலை வேங்கைகள் நிறுவனரும், அமைப்பாளருமான மங்கையர் செல்வன் தலைமை தாங்கி பேசினார். புதுவை மாநில முதன்மை செயலாளர் மோகன், துணை பொதுச்செயலாளர் பரசுராமன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

மத்திய அரசு சாகர் மாலா திட்டத்தை கைவிட வேண்டும், கடற்கரை மண்டல மேலாண்மை வரைபட வரைவு திட்டத்தை உருவாக்கி அதன் அடிப்படையில் மாவட்ட வாரியாக மக்கள் கருத்தறியும் கூட்டத்தை நடத்த மத்திய–மாநில அரசுகளை இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.

புதுச்சேரி மீன்பிடி துறைமுக முகத்துவாரம் தூர்ந்துபோய் உள்ளது. விசைப்படகு தரைத்தட்டி சேதமடைகிறது. எனவே கடலில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். புதுச்சேரி மீன்வளத்துறை கடந்த 3 ஆண்டுகளாக மீனவர்களுக்கு புயல்கால நிவாரண உதவித்தொகை வழங்கவில்லை. புயல்கால நிவாரணத்தொகையை உடனே வழங்க வேண்டும்.

புயல்கால நிவாரணத்தொகையை தமிழகத்தை போல புதுவையிலும் ரூ.4,500 ஆக வழங்க வேண்டும். வேதிப்பொருட்களால் உருவான விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதால் மீன் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. எனவே வேதிப்பொருட்களான உருவான விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதை தடை செய்ய வேண்டும்.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக தலைமை ஆலோசகர் கங்காதரன் வரவேற்றார். இதில் புதுச்சேரி விடுதலை வேங்கைகள் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பெருமாள் நன்றி கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ராகுல்காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும் மகளிர் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
ராகுல்காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும் என்று மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
2. பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற பெயரில் வியாபாரிகளை அச்சுறுத்தும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் வணிகர் சங்கங்களின் பேரவை கூட்டத்தில் தீர்மானம்
பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற பெயரில் வியாபாரிகளை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டத்தில் தீர்மானம்
தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4. அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தக்கூடாது கிளை கூட்டத்தில் தீர்மானம்
அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தக்கூடாது என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிளை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. வருகிற 8, 9–ந் தேதிகளில் நடக்கும் வேலைநிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்க வேண்டும்; ஏ.ஐ.டி.யு.சி. மோட்டார் தொழிலாளர் சங்க மாநாட்டில் தீர்மானம்
வருகிற 8, 9–ந் தேதிகளில் நடக்கும் வேலைநிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தனியார் மோட்டார் தொழிலாளர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.