மாவட்ட செய்திகள்

தாயின் மடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி + "||" + Falling from the mother lap The child is dead

தாயின் மடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி

தாயின் மடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி
விழுப்புரம் அருகே தாயின் மடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

செஞ்சி, 

விழுப்புரம் அருகே உள்ள சங்கீதமங்கலம் காலனியை சேர்ந்தவர் சத்தியநாராயணன்(வயது 35). இவருடைய மனைவி கிளிராமேரி. இவர்களுக்கு 1½ வயதில் யோகேஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று சத்தியநாராயணன், தனது மனைவி கிளிராமேரி, குழந்தையோகேசுடன் நேமூரில் இருந்து கஞ்சனூர் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

வெங்காயகுப்பம் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னாள் வைக்கோல் ஏற்றிச்சென்ற டிராக்டரை சத்தியநாராயணன் முந்திச்செல்ல முயன்றார். அப்போது டிராக்டரில் இருந்த வைக்கோல் உரசியதில், கிளிராமேரியின் மடியில் இருந்த குழந்தை யோகேஷ் தவறி கீழே விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த குழந்தை யோகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது காண்போரின் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த கஞ்சனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான குழந்தை யோகேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தோட்டத்துக்கு சென்ற விவசாயி மர்மச்சாவு
செக்கானூரணி அருகே தோட்டத்துக்கு சென்ற விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
2. சத்தி அருகே மூளைக்காய்ச்சலுக்கு மாணவர் சாவு: தாய்– தந்தை, தம்பியை இழந்து தனிமரமாக நிற்கும் இளம்பெண் அரசு வேலை வழங்க மலைவாழ் மக்கள் கோரிக்கை
சத்தியமங்கலம் அருகே மூளைக்காய்ச்சலுக்கு மாணவர் பரிதாபமாக இறந்தார். தாய்–தந்தை மற்றும் தம்பியை இழந்து தனிமரமாக நிற்கும் இளம்பெண்ணுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. சத்தியமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தாய்– மகள் சாவு
சத்தியமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தாய், மகள் பரிதாபமாக இறந்தனர். வாலிபர் படுகாயம் அடைந்தார்.
4. மோட்டார் சைக்கிள்– பஸ் மோதல் வாலிபர் சாவு
நெட்டப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளும் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு வாலிபர் பரிதாபமாகச் செத்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
5. நண்பரின் திருமணத்துக்கு வந்த போது பரிதாபம்: கிணற்றுக்குள் விழுந்து பலியான கூலி தொழிலாளியின் உடல் மீட்பு
சேவூர் அருகே நண்பரின் திருமணத்துக்கு வந்த போது கிணற்றுக்குள் விழுந்து பலியான கூலி தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டது.