மாவட்ட செய்திகள்

சென்னை குரோம்பேட்டையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் + "||" + In Chennai chromatet Voter list Adding name Special camp

சென்னை குரோம்பேட்டையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்

சென்னை குரோம்பேட்டையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்
காஞ்சீபுரம் மாவட்டத்தின் 11 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 4,102 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் தொடர்பான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் நடைபெற்ற சிறப்பு முகாமை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது பெயர் சேர்த்தலுக்கு பிறப்பு சான்று, மாற்றுச்சான்றுகளை சரியாக சரிபார்த்து வாங்கும்படியும், முகவரி மாற்றம் உள்பட திருத்தலின்போது பழைய வாக்காளர் அட்டை, தற்போது வசிக்கும் முகவரிக்கு உட்பட்ட குடும்பஅட்டை, ஆதார்அட்டை என அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து வாங்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்று, வாக்காளர் அடையாளஅட்டை பெறப்படாத வாக்காளர்களின் விவரங்களை பெற்று, அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை பெற்றுத்தருவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.


தொடர்புடைய செய்திகள்

1. 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் சேர்க்க நடவடிக்கை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
18 வயது பூர்த்தி அடைந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.
2. வாக்காளர் பட்டியலில் இருந்து 10 ஆண்டுக்கு முன் இறந்தவர்களின் பெயர்களையும் நீக்க வேண்டும்
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் இருந்து 10 ஆண்டுக்கு முன் இறந்தவர்களின் பெயர்களையும் நீக்க வேண்டும் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. பேட்டி அளித்துள்ளார்.
3. தமிழகம் முழுவதும் இறுதிகட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குவதற்கான சிறப்பு முகாம் இறுதி கட்டமாக நேற்று நடந்தது. சென்னையில் 3 ஆயிரத்து 754 மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது.
4. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அடுத்த மாதம் 20-ந்தேதி வரை அவகாசம் தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நேற்று முன்தினம் முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 20-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
5. தமிழகம் முழுவதும் 3-ம் கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குவதற்கான சிறப்பு முகாம் 3-ம் கட்டமாக நேற்று நடந்தது. சென்னையில் 3 ஆயிரத்து 754 மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது.