மாவட்ட செய்திகள்

திருப்பூரில் பா.ஜனதா பிரமுகர் வீட்டிற்கு வந்த மர்ம பார்சலால் பரபரப்பு + "||" + The mystery parcel came to the house of the late BJP leader in Tirupur

திருப்பூரில் பா.ஜனதா பிரமுகர் வீட்டிற்கு வந்த மர்ம பார்சலால் பரபரப்பு

திருப்பூரில் பா.ஜனதா பிரமுகர் வீட்டிற்கு வந்த மர்ம பார்சலால் பரபரப்பு
திருப்பூரில் பா.ஜனதா பிரமுகர் வீட்டிற்கு வந்த மர்ம பார்சலால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் முத்துநகர் பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 60). இவர் பா.ஜனதாவின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்றுகாலை நாச்சிமுத்து வீட்டை விட்டு வெளியே சென்றார். அப்போது அவரது வீட்டிற்கு வந்த ஒருவர் நாச்சிமுத்து கொடுக்க சொன்னதாக ஒரு பார்சலை கொடுத்து விட்டு, ஓட்டம் பிடித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் இது குறித்து நாச்சிமுத்துவை செல்போனில் தொடர்புகொண்டு கேட்டுள்ளனர். அவர் தான் எதும் கொடுத்து விடவில்லை என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மர்ம பார்சல் குறித்து திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த பார்சலை கொடுத்தது திருப்பூர் சஞ்சய்நகரை சேர்ந்த ரத்தினசபாபதி (49) என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சாமி தனது கனவில் வந்து புதிய பேண்ட், சட்டை துணிகள், செருப்பு, சாமி படங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி அதனை நாச்சிமுத்து வீட்டில் கொடுத்தால், நல்லது நடக்கும் என தெரிவித்ததாகவும், அதனால் அந்த பார்சலை கொண்டு அவரது வீட்டில் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் தான் ரத்தினசபாபதி மனநிலை பாதித்தவர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரத்தின சபாபதியை போலீசார் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. புதுவை கவர்னர் மாளிகை முன் நாராயணசாமி– அமைச்சர்கள் போராட்டம் 3–வது நாளாக நீடிப்பு துணை ராணுவத்தினரின் கெடுபிடியால் பரபரப்பு
புதுவை கவர்னர் மாளிகை முன் முதல்–அமைச்சர் நாராயணசாமி, மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் போராட்டம் 3–வது நாளாக நீடித்தது. முக்கிய பிரமுகர்களை போராட்ட களத்துக்குள் துணை ராணுவத்தினர் அனுமதிக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2. கவர்னர்-முதல்வர் மோதல் உச்சக்கட்டம்: மக்கள் நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை; கவர்னர் மாளிகை முன்பு நாராயணசாமி தர்ணா
மக்கள் நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக கவர்னர் கிரண்பெடியை கண்டித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி கவர்னர் மாளிகை முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் இறங்கினார். மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
3. திருமணம் செய்து வைக்க மறுத்ததால் பெண்ணின் தந்தை முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபர் தேவகோட்டையில் பரபரப்பு
தேவகோட்டையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்தால் அந்த பெண்ணின் தந்தை முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
4. பா.ஜ.க. தலைவர் அமித்ஷா இன்று ஈரோடு வருகை நெசவாளர்களுடன் கலந்துரையாடுகிறார்
பா.ஜ.க. தலைவர் அமித்ஷா இன்று (வியாழக்கிழமை) ஈரோடு வருகிறார். அவர் நெசவாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.
5. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.–பா.ஜ.க.வை மக்கள் புறக்கணிப்பார்கள் தங்க தமிழ்செல்வன் பேட்டி
நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் பேசினார்.