மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை + "||" + Rameswaram, Pamban and the fishermen did not go to the sea

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராமேசுவரம் பகுதி மீனவர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேசுவரம்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி கட்சிகள் இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு அழைத்து விடுத்துள்ளனர். மேலும் இதற்கு ஆதரவு தெரிவித்து ராமேசுவரம் பகுதி மீனவர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 இந்த நிலையில் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ராமேசுவரம் மீனவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இதேபோல பாம்பனுக்கு கேரளாவில் இருந்து மீன்கள் கொள்முதல் செய்வதற்காக வரும் கம்பெனிகள் கடந்த சில நாட்களாக வரவில்லை. இதனால் மீன்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக பாம்பன் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு பாம்பன் மீனவர்களும் ஆதரவு தெரிவித்து இன்று கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ராமேசுவரம் பகுதியில் 800 படகுகளும், பாம்பனில் 150 படகுகளும் கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல மண்டபத்தில் உள்ள அனைத்து விசைப்படகு மீனவர்களும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ராமேசுவரம் அருகே நடுக்கடலில் கடல் கொந்தளிப்பால் படகு மூழ்கியது 4 மீனவர்கள் பத்திரமாக மீட்பு
ராமேசுவரத்தில் நடுக்கடலில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக படகு மூழ்கியது. அதில் இருந்த 4 பேரை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.
2. துறைமுக முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை
புதுச்சேரி துறைமுக முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர். அவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
3. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா அடுத்த மாதம் 15,16-ந் தேதிகளில் நடக்கிறது
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா அடுத்த மாதம் 15,16-ந் தேதிகளில் நடக்கிறது.
4. திருச்செந்தூர் அருகே பரபரப்பு கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம் தூண்டில் வளைவு பாலம் அமைக்க கோரிக்கை
திருச்செந்தூர் அருகே தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தி கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல நாட்டுப்படகுகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா? மீனவர்கள் எதிர்பார்ப்பு
கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல இந்த ஆண்டு நாட்டுப்படகு மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்று மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.