மாவட்ட செய்திகள்

கடல் கொந்தளிப்பால் பாம்பன் குந்துகால் கடல் பகுதியில் மூழ்கிய மிதவைக்கப்பல் மீட்பு + "||" + Sea turbulence Sink floating ship rescue

கடல் கொந்தளிப்பால் பாம்பன் குந்துகால் கடல் பகுதியில் மூழ்கிய மிதவைக்கப்பல் மீட்பு

கடல் கொந்தளிப்பால் பாம்பன் குந்துகால் கடல் பகுதியில் மூழ்கிய மிதவைக்கப்பல் மீட்பு
கடல் கொந்தளிப்பால் பாம்பன் குந்துகால் கடல் பகுதியில் மூழ்கிய மிதவைக்கப்பல் பாதுகாப்பாக மீட்கப்பட்டது

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துகால் கடற்கரையில் ரூ.70 கோடி மதிப்பில் புதிதாக ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் கட்டுவதற்கான பணி கடந்த 2 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. மேலும் துறைமுகம் கட்டும் பணியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒரு மிதவைக்கப்பல் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுகு முன்பு பாம்பன் பகுதியில் வீசிய பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாலும் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்த மிதவைக்கப்பல் கடலில் மூழ்கியது. கடலில் மூழ்கிய கப்பலை ரப்பர் மிதவை மூலமும், நாட்டுப்படகு மீனவர்கள் உதவியுடனும் மீட்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் 3 நாட்களுக்கு பிறகு மிதவைக் கப்பல் நேற்று மீட்கப்பட்டு குந்துகால் கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கப்பல் சரி செய்யப்பட்டு இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில் குழந்தை தொழிலாளர்கள் 3 பேர் மீட்பு
சேலத்தில் குழந்தை தொழிலாளர்கள் 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
2. ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை; கஜா புயலை எதிர்கொள்ள நடவடிக்கை தீவிரம்
கஜா புயலை எதிர்கொள்ளும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதையொட்டி தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் வந்துள்ளனர்.
3. தெற்குவெளி வீதியில் ஆக்கிரமிப்பில் இருந்த மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மீட்பு
மதுரை தெற்குவெளி வீதியில் ஆக்கிரமிப்பில் இருந்த மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டன.
4. கோவிலுக்கு சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு - ஐகோர்ட்டில் அரசு தகவல்
கோவிலுக்கு சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது என்று ஐகோர்டில் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
5. திருப்பூரில் காணாமல் போன பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டிலேயே பிணமாக மீட்பு
திருப்பூரில் 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போனவர் அவர் சொந்த வீட்டிலேயே சடலமாக மீட்கப்பட்டார். செல்போன் சிக்னல் மூலமாக உறவினர்கள் கண்டுபிடித்தனர்.