மாவட்ட செய்திகள்

மதுக்கடையை மூடக்கோரி மறியலில் ஈடுபட்டதாக 30 பேர் மீது வழக்கு + "||" + The case was filed against 30 people who were involved in breach of liquor

மதுக்கடையை மூடக்கோரி மறியலில் ஈடுபட்டதாக 30 பேர் மீது வழக்கு

மதுக்கடையை மூடக்கோரி மறியலில் ஈடுபட்டதாக 30 பேர் மீது வழக்கு
மதுக்கடையை மூடக்கோரி மறியலில் ஈடுபட்டதாக 30 பேர் மீது வழக்கு செய்யப்பட்டது.
பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கள்ளியூரில் அரசு மதுக்கடை இயங்கி வந்தது. இந்த கடையால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த மதுக்கடையை மூடக்கோரி, நேற்று முன்தினம் அம்மாபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏ.பள்ளிப்பட்டி-தென்கரைகோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் மதுக்கடையை அவர்கள் முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் மதுக்கடைக்கு பொதுமக்கள் புதிய பூட்டு போட்டு பூட்டினர்.

இதுகுறித்து, டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் அர்ச்சுனன் ஏ.பள்ளிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, கடையை திறக்க விடாமல், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியும், அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக, அம்மாபாளையத்தை சேர்ந்த பூசி(வயது 48), சித்ரா (42) சுமதி, பழனியம்மாள், கவிதா, சத்யா, மாரி, கருங்கண்ணன், செல்வி, மலர், முருகேசன், உள்ளிட்ட 30 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.