மாவட்ட செய்திகள்

குயவன்குடி அருகே கார்–வேன் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் படுகாயம் + "||" + Car - van collision: 9 injured

குயவன்குடி அருகே கார்–வேன் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் படுகாயம்

குயவன்குடி அருகே கார்–வேன் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் படுகாயம்
குயவன்குடி அருகே கார்–வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் காயமடைந்தனர்.

பனைக்குளம்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சதாசிவபுரம் அருகே உள்ள சூரங்காட்டு கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் (வயது 50) என்பவர் தனது குடும்பத்தினர் 9 பேருடன் ராமேசுவரம் கோவிலுக்கு சாமி கும்பிட காரில் வந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று மாலை ராமேசுவரத்தில் இருந்து காரில் புறப்பட்டு ஊருக்கு திரும்பி சென்றனர். காரை மாணிக்கம் என்பவர் ஓட்டி வந்தார். இந்தநிலையில் குயவன்குடி அருகே வந்தபோது, எதிர்பாராதநிலையில் எதிரே வந்த வேன் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த மாணிக்கம், பூங்கொடி(41), அருண்குமார் (25), சுதா (27), பொன்னம்மாள் (22), கவுதமன் (12), ஸ்ரீதரன் (9), கீர்த்திகா (4), ஜனனி (3) ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பரமக்குடி அருகே அரசு பஸ்–டிப்பர் லாரி நேருக்குநேர் மோதல்– 10 பேர் படுகாயம்
பரமக்குடி அருகே அரசு பஸ்–டிப்பர் லாரி நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் நிலை தடுமாறிய பஸ் சாலையோரத்தில் இருந்த வீட்டிற்கு புகுந்து நின்றது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 10 பேர் படுகாயமடைந்தனர்.
2. கீழக்கரையில் மணல் அள்ளும் எந்திரம் கவிழ்ந்து ஆட்டோ நசுங்கியது பெண் உள்பட 2 பேர் படுகாயம்
கீழக்கரையில் மணல் அள்ளும் எந்திரம் கவிழ்ந்து ஆட்டோ நசுங்கியது. இதில் பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. ஈஞ்சம்பாக்கத்தில் தாறுமாறாக ஓடிய கார்; ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் மீது மோதல், பெண் படுகாயம்
ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் தாறுமாறாக ஓடிய கார் ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதில் பெண் படுகாயமடைந்தார்.
4. புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல் படுகாயம் அடைந்த வாலிபர் உயிரிழந்தார்
புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட மோதலில் படுகாயம் அடைந்த வாலிபர் உயிரிழந்தார்.
5. கயத்தாறு அருகே அறுவடை எந்திரத்தில் சிக்கி பெண் படுகாயம்
கயத்தாறு அருகே அறுவடை எந்திரத்தில் சிக்கி பெண் படுகாயம் அடைந்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...