மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம் அருகே கார் மரத்தில் மோதி கட்டிட காண்டிராக்டர் உள்பட 4 பேர் பலி + "||" + 4 people killed in car crash

ராமநாதபுரம் அருகே கார் மரத்தில் மோதி கட்டிட காண்டிராக்டர் உள்பட 4 பேர் பலி

ராமநாதபுரம் அருகே கார் மரத்தில் மோதி கட்டிட காண்டிராக்டர் உள்பட 4 பேர் பலி
ராமநாதபுரம் அருகே கார் மரத்தில் மோதியதில் 4 பேர் பலியாகினர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிப்புளி போலீஸ் நிலைய பகுதியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் அந்தோணிராஜ். இவர் காரில் அதே பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி(வயது 50), கோவிந்தம்மாள், கீதா ஆகியோருடன் ராமநாதபுரம் சென்றார். பின்னர் அவர்கள் 4 பேரும் காரில் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.

உச்சிப்புளி அருகே அம்மாச்சி அம்மன் கோவில் அருகில் கார் வந்தபோது திடீரென நிலைதடுமாறியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் வேகமாக மோதியது. இதில் கார் நொறுங்கியது. இதில் காரில் இருந்த 3 பெண்களும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்தோணிராஜ் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று காரில் இருந்து 3 பெண்களின் உடல்களையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த கலெக்டர் வீரராகவராவ் விபத்து குறித்து கேட்டறிந்தார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திருஉத்தரகோசமங்கை அருகே பரிதாபம்: கபடி விளையாடிய போது மயங்கி விழுந்து வாலிபர் சாவு
திருஉத்தரகோசமங்கை அருகே வெண்குளம் கிராமத்தில் கபடி விளையாடியபோது கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்துபோனார்.
2. பூச்சி மருந்து குடித்து சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி பரிதாப சாவு கடைக்கு தனியாக செல்ல வேண்டாம் என தாயார் கூறியதால் விபரீத முடிவு
பூச்சி மருந்தை குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.
3. மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
புதுச்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
4. மோட்டார் சைக்கிள்–மொபட் மோதல்; விவசாயி பலி
திட்டக்குடியில் மோட்டார் சைக்கிள்–மொபட் மோதிய விபத்தில் விவசாயி இறந்தார். இதில் 2 அதிகாரிகள் காயமடைந்தனர்.
5. பாளையங்கோட்டையில் அடுத்தடுத்து சம்பவம் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலி
நெல்லையில் அடுத்தடுத்த சம்பவங்களில் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலியானார்கள்.