மாவட்ட செய்திகள்

மானாமதுரை அருகே போலீஸ் வாகனம் கவிழ்ந்து 8 போலீஸ்காரர்கள் காயம் + "||" + Police vehicle disappeared The policemen were injured

மானாமதுரை அருகே போலீஸ் வாகனம் கவிழ்ந்து 8 போலீஸ்காரர்கள் காயம்

மானாமதுரை அருகே போலீஸ் வாகனம் கவிழ்ந்து 8 போலீஸ்காரர்கள் காயம்
மானாமதுரை அருகே போலீஸ் வாகனம் கவிழ்ந்து 8 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கடந்த மே மாதம் நடந்த வன்முறை சம்பவத்தில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 10–க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கச்சநத்தம் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் திருப்பாச்சேத்தியில் தங்கியுள்ளனர். அவர்கள் தினசரி அங்கிருந்து கச்சநத்தம் கிராமத்திற்கு போலீஸ் வாகனத்தில் சென்று, மீண்டும் திரும்புவது வழக்கம். இந்தநிலையில் வழக்கம்போல் நேற்று ஒரு போலீஸ் வாகனத்தில் 10–க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் கச்சநத்தம் சென்று கொண்டிருந்தனர்.

திருப்பாச்சேத்தி–தஞ்சாக்கூர் சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் எதிரே வந்த டிராக்டருக்கு வழிவிட சாலையோரத்தில் போலீஸ் வாகனத்தை டிரைவர் இறக்கியுள்ளார். அப்போது போலீஸ் வாகனம் எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். பின்னர் காயமடைந்த அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மானாமதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பழையனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல சதி: கைதான 5 பேரின் போலீஸ் காவல் முடிந்தது; சிறையில் அடைப்பு
இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல சதி திட்டம் தீட்டிய வழக்கில் கைதான 5 பேரின் போலீஸ் காவல் முடிவடைந்தது. இதனால் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
2. நேர்மையான அதிகாரிகள், அரசுகளால் பந்தாடப்படுகின்றனர் - கர்நாடக போலீஸ் ஐ.ஜி. ரூபா பேட்டி
ஊழலுக்கு எதிராக நாடுமுழுவதும் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்றும், நேர்மையான அதிகாரிகள் வளைந்து கொடுக்க மறுப்பதால் அரசுகளால் இடமாற்றம் செய்யப்பட்டு பந்தாடப்படுகிறார்கள் என்றும் கர்நாடக மாநில ஐ.ஜி. ரூபா கூறினார்.
3. குட்கா ஊழல் விவகாரம்: ஜார்ஜ் குற்றச்சாட்டுக்கு விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பதில்
குட்கா விவகாரத்தில் ஜார்ஜ் என் மீது வீண்பழி சுமத்துகிறார் என்று விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
4. தூத்துக்குடியில் நடந்த போலீஸ் உடல்தகுதி தேர்வில் 835 பேர் தேர்ச்சி போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தகவல்
தூத்துக்குடியில் நடந்த போலீஸ் உடல் தகுதி தேர்வில் 835 பேர் தேர்ச்சி பெற்று உள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தெரிவித்து உள்ளார்.
5. கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் இலக்கு டெல்லி கிடையாது - போலீஸ்
டெல்லி செங்கோட்டையில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த இரு பயங்கரவாதிகளை கைது செய்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.