மாவட்ட செய்திகள்

தொடர் திருட்டில் ஈடுபட்ட தாய், மகன் உள்பட 3 பேர் கைது + "||" + Three persons, including a mother and a son, were arrested for stealing

தொடர் திருட்டில் ஈடுபட்ட தாய், மகன் உள்பட 3 பேர் கைது

தொடர் திருட்டில் ஈடுபட்ட தாய், மகன் உள்பட 3 பேர் கைது
ஓசூரில், தொடர் திருட்டில் ஈடுபட்ட தாய், மகன் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார், 21 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
ஓசூர்,

ஓசூர் அட்கோ போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சரண்யா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பஸ் நிலையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த 2 பெண்கள் உள்பட 3 பேரை விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை அட்கோ போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அதில் அவர்கள் மதகொண்டப்பள்ளி அருகே உள்ள சின்னகோடுப்பள்ளியை சேர்ந்த முனிராஜ் (வயது 20), அவரது தாய் சாந்தம்மா (40), வேப்பனப்பள்ளி அடுத்த நாச்சிகுப்பம் பகுதியை சேர்ந்த நாகரத்தினம்மா (35) என்பதும், ஓசூர் பகுதியில் வீடு புகுந்து திருடுவது மற்றும் முதியவர்களை ஏமாற்றி நகை பறிப்பில் ஈடுபட்டது என தொடர் திருட்டு செயல்களில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 21 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. சிவகிரி அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் காரில் கடத்தல்; 6 பேர் கைது
சிவகிரி அருகே, காதல் திருமணம் செய்த வாலிபரை காரில் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பெண்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. அன்னூர் அருகே: தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 103 பேர் கைது
அன்னூர் அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 103 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. வையம்பட்டி அருகே ஆசிரியை குளித்ததை செல்போனில் வீடியோ எடுத்து ரசித்த 3 மாணவர்கள் கைது
வையம்பட்டி அருகே பள்ளி ஆசிரியை குளித்ததை செல்போனில் வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. கந்து வட்டி கேட்டு கொலை முயற்சி செய்தவரை கைது செய்ய வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டிடம் தொழிலாளி மனு
கந்து வட்டி கேட்டு கொலை முயற்சி செய்தவரை கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் தொழிலாளி மனு கொடுத்தார்.
5. இந்து மகா சபாவினர் மோட்டார் சைக்கிளில் பேரணி செல்ல முயற்சி 121 பேர் கைது
சபரிமலை புனிதத்தை பாதுகாக்க வலியுறுத்தி மோட்டார் சைக்கிளில் பேரணியாக செல்ல முயன்ற இந்து மகா சபாவினர் 121 பேரை போலீசார் கைது செய்தனர்.