மாவட்ட செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாம் - கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு + "||" + Special camp for removing the name and removal of the voter list - Collector Prabhakar examined in person

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாம் - கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாம் - கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாமை கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைகல்லூரியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரை சேர்க்கும் பொருட்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடைபெறுகிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இடமாறுதல் செய்யப்பட்ட பின் விண்ணப்பங்கள் படிவம் 6, 7, 8 மற்றும் 8ஏ மாவட்டத்திலுள்ள 1,850 வாக்கு சாவடி மையங்களிலும் படிவங்கள் பெறும் முகாம் நடைபெறுகிறது.

1.1.2019-ம் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரை சேர்க்கும் பொருட்டு சிறப்பு சுருக்க முறை திருத்தமானது நடைபெறுகிறது. இதில் வருகிற 31.10.2018 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இடமாறுதல் செய்யப்பட்ட பின் விண்ணப்பங்கள் படிவம் 6, 7, 8 மற்றும் 8ஏ மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் படிவங்கள் பெறப்பட உள்ளது. வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களில் படிவங்களை சமர்ப்பிக்கலாம்.

வாக்காளர் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் 23.9.2018, 7.10.2018 மற்றும் 14.10.2018 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் 1,850 வாக்கு சாவடி மையங்களிலும் நடக்கிறது. அன்றைய தினம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடமாறுதல் ஆகியவற்றிற்கான படிவங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த படிவங்களை மேற்கண்ட தேதிகளில் அந்தந்த வாக்கு சாவடி மையங்களில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கிருஷ்ணகிரியில் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. மத்திய-மாநில அரசுகளை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3. கிருஷ்ணகிரி: பணம் வைத்து சூதாடிய 15 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 1,783 விநாயகர் சிலைகள் கரைப்பு
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 1,783 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கப்பட்டன.
5. கிருஷ்ணகிரி: 756 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி
விநாயகர் சதுர்த்தியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 756 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க போலீஸ் சார்பில் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.