மாவட்ட செய்திகள்

விஷம் குடித்து சிற்ப கலைஞர் தற்கொலை + "||" + The sculptor who committed poison was suicidal

விஷம் குடித்து சிற்ப கலைஞர் தற்கொலை

விஷம் குடித்து சிற்ப கலைஞர் தற்கொலை
கொரடாச்சேரி அருகே கடன் கொடுத்தவர் தனது வீட்டின் அருகே குடிசை அமைத்ததால் மனமுடைந்த சிற்ப கலைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கொரடாச்சேரி, 


கொரடாச்சேரி அருகே உள்ள மேப்பலம் சுப்புநகரை சேர்ந்தவர் சுகுமாறன் (வயது 46). சிற்ப கலைஞர். இவர் வீடு கட்டுவதற்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியுள்ளார். இவர் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து ரூ.40 லட்சத்திற்கு அதிகமானதாக கூறப்படுகிறது. இந்த தொகையினை உடன் வழங்க வேண்டும் என கடன் கொடுத்தவர்கள் சுகுமாறனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் சுகுமாறன் கஷ்டப்பட்டார்.

இந்தநிலையில் திருவாரூரில் உள்ள இவருடைய வீட்டிற்கு அருகே கடன் கொடுத்த ஒருவர் குடிசை அமைத்துள்ளார். இதனால் அவமானம் தாங்க முடியாமல் சுகுமாறன் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுகுமாறன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சுகுமாறனின் மனைவி பாலசுந்தரி கொடுத்த புகாரின்பேரில் கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேதவள்ளி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
கொரடாச்சேரி அருகே மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
2. தேர்வில் தோல்வி அடைந்ததால் மனவேதனை: திருச்சியில் ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயரிங் மாணவி தற்கொலை
தேர்வில் தோல்வி அடைந்ததால் திருச்சியில் ரெயில் முன் பாய்ந்து ராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
3. கந்து வட்டி கொடுமையால் பரிதாபம் முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதி விட்டு தபால் ஊழியர் தற்கொலை
நாகர்கோவில் அருகே கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொள்ள போவதாக முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதி விட்டு, தபால் ஊழியர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
4. செங்கல்பட்டு அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை போலீசை கண்டித்து உறவினர்கள் சாலைமறியல்
செங்கல்பட்டு அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் மிரட்டியதால் தற்கொலை செய்ததாக கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
5. நாகர்கோவிலில் பரிதாபம்: கல்லூரி மாணவி தற்கொலை
நாகர்கோவிலில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆசிரியரின் தேர்வுகள்...