மாவட்ட செய்திகள்

காங்கிரஸ் சார்பில் முழுஅடைப்பு: புதுவையில் பஸ்கள்– ஆட்டோக்கள் ஓடாது + "||" + Congress on behalf of Congress at pondichery, buses - Autos do not run

காங்கிரஸ் சார்பில் முழுஅடைப்பு: புதுவையில் பஸ்கள்– ஆட்டோக்கள் ஓடாது

காங்கிரஸ் சார்பில் முழுஅடைப்பு: புதுவையில் பஸ்கள்– ஆட்டோக்கள் ஓடாது
புதுவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நடக்கும் முழுஅடைப்பு போராட்டம் நடக்கிறது. இந்த முழுஅடைப்பு காரணமாக பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாது.

புதுச்சேரி,

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்த முழு அடைப்புக்கு தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக புதுவையில் இன்று (திங்கட்கிழமை) பஸ்கள் ஆட்டோக்கள் ஓடாது. தியேட்டர்களிலும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியே இந்த முழு அடைப்பு போராட்டத்தை நடத்துவதால் அரசு பஸ்களும் இயக்கப்படாது என்று தெரிகிறது.

தொகுதிதோறும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட்டு முழுஅடைப்பு போராட்டத்தை வெற்றிபெற செய்யுமாறு காங்கிரஸ் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் இணைந்து முழு அடைப்புக்கு ஆதரவு திரட்டும் பணியிலும் ஈடுபட்டனர்.

முழுஅடைப்பினையொட்டி புதுவையில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதவாறு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. காங்கேயத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
காங்கேயம் வட்டார பகுதிகளில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.
2. மக்கள் சேவையில் மாணவர் காங்கிரசார் ஆர்வம் காட்டவேண்டும்; அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தல்
மக்கள் சேவையில் மாணவர் காங்கிரசார் ஆர்வம் காட்டவேண்டும். என, வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தொண்டர்கள், நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.
3. தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியான தட்டாஞ்சாவடியில் காங்கிரஸ் போட்டி இல்லை - நாராயணசாமி பேட்டி
புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
4. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் புதுவையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் - முதல் அமைச்சர் நாராயணசாமி பேச்சு
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் புதுவையில் போட்டியிடும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று முதல் அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
5. வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்த வழக்கில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு ஒரு ஆண்டு சிறை
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் புதுவை என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த், அவரது தந்தை ஆனந்தன் ஆகிய 2 பேருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.