மாவட்ட செய்திகள்

சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 18–ந்தேதி முற்றுகை + "||" + Siege of Corporation Regional Offices It's going on 18th

சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 18–ந்தேதி முற்றுகை

சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 18–ந்தேதி முற்றுகை
சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் முற்றுகையிடும் போராட்டம் வருகிற 18–ந்தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது.

கோவை,

கோவை மாநகரில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பாக சூயஸ் நிறுவனத்துடன் மாநகராட்சி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சி.ஐ.டி.யு., அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்களையும் முற்றுகையிடும் போராட்டம் வருகிற 18–ந்தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது.

இதில் மேற்கண்ட அமைப்புகளை சேர்ந்த பத்மநாபன், கனகராஜ், பிரபாகரன், சிவஞானம் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இதுகுறித்து சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பத்மநாபன் கூறியதாவது:–

 சூயஸ் நிறுவனத்துடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தால் கோவை மாநகரில் உள்ள பொது குடிநீர் குழாய்கள் அகற்றப்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த நிறுவனத்துடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்களும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையை அழகுப்படுத்த ரூ.33 கோடி ஒதுக்கீடு தொல்லியல், மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையை அழகுப்படுத்த ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி கமி‌ஷனர் தெர
2. குப்பையை உரமாக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
குப்பையை உரமாக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாநகராட்சியின் 2–வது வார்டு பகுதியை சேர்ந்த மக்கள் 1–வது மண்டல அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
3. மாநகராட்சி விளையாட்டு திடல்கள் புனரமைக்கப்படுமா? பொதுமக்கள்-சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
சென்னையில் பராமரிப்பின்றி அலங்கோலமாக காட்சியளிக்கும் மாநகராட்சி விளையாட்டு திடல்கள் புனரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளனர்.
4. திருப்பூரில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
திருப்பூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
5. அனுமதியற்ற மனைப்பிரிவுகளை முறைப்படுத்த தூத்துக்குடி மண்டல அலுவலகங்களில் சிறப்பு முகாம் மாநகராட்சி ஆணையாளர் தகவல்
அனுமதியற்ற மனைப்பிரிவுகளை முறைப்படுத்த தூத்துக்குடி மண்டல அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.