மாவட்ட செய்திகள்

ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேரையும் விடுவிப்பதில் தவறில்லை - சரத்குமார் பேட்டி + "||" + Rajiv's murder case is not wrong to release 7 prisoners Sarath Kumar

ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேரையும் விடுவிப்பதில் தவறில்லை - சரத்குமார் பேட்டி

ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேரையும் விடுவிப்பதில் தவறில்லை - சரத்குமார் பேட்டி
ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேரையும் விடுவிப்பதில் தவறில்லை என மதுரையில் சரத்குமார் பேட்டி அளித்தார்.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது–

ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்து கவர்னருக்கு பரிந்துரைக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என அறிவித்தாலும் கூட அவர்கள் தண்டனையை அனுபவித்து இருக்கிறார்கள். எனவே அவர்களை விடுவிப்பதில் எந்த தவறும் இல்லை.

குட்கா ஊழல் குற்றச்சாட்டினை நிரூபித்த பிறகு ஆளும் கட்சியை பற்றி விமர்சிக்கலாம். இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியினரோடு கலந்து பேசி இறுதி கட்ட முடிவு எடுக்கப்படும். போலீஸ் அதிகாரியின் வீட்டில் சோதனை நடந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. பாராளுமன்ற தேர்தல் வரும்போது அதில் போட்டியிடுவது பற்றி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. விபத்துகளில் ஓராண்டில் 3,597 பேர் பலி: சாலைகளை மக்களா பராமரிக்க முடியும்? - சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
சாலை விபத்துகள் குறித்த வழக்கில், குண்டும், குழியுமான சாலைகளை மக்களா பராமரிக்க முடியும் என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
2. விருதுநகரில் பயங்கரம்: பழிக்குப்பழியாக தொழிலாளி கொலை
விருதுநகரில் கொலைவழக்கில் ஜாமீனில் வந்த கட்டிட தொழிலாளியை பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
3. ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை தொடர்பான வழக்கு: மனுதாரர்களுக்கு 3 வாரம் அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுதலை செய்யும் விவகாரம் தொடர்பான வழக்கில், மனுதாரர்களுக்கு 3 வார காலம் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
4. சசிகுமார் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கலுக்கு பிறகும் விசாரணை, கலெக்டரிடம் புகார் மனு
சசிகுமார் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
5. மின்சாரம் பாய்ந்து வன உயிரினங்கள் இறப்பதாக வழக்கு: மத்திய–மாநில அரசுகளுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்
வனப்பகுதியில் தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளில் சிக்கி யானைகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் இறப்பதாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய –மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.