மாவட்ட செய்திகள்

எலக்ட்ரிக்கல் கடைகாரரிடம் ரூ.22½ லட்சம் மோசடி: கட்டிட உரிமையாளர் மீது வழக்கு + "||" + Fraud With Electric Shop The case of the building owner

எலக்ட்ரிக்கல் கடைகாரரிடம் ரூ.22½ லட்சம் மோசடி: கட்டிட உரிமையாளர் மீது வழக்கு

எலக்ட்ரிக்கல் கடைகாரரிடம் ரூ.22½ லட்சம் மோசடி: கட்டிட உரிமையாளர் மீது வழக்கு
காரைக்குடி அருகே எலக்ட்ரிக்கல் கடைகாரரிடம் ரூ.22½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட கட்டிட உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

காரைக்குடி,

காரைக்குடி அருகே ஸ்ரீராம்நகர் திரு.வி.க.நகரில் வசித்து வருபவர் அபிமன்யு படேல்(வயது 33). இவர் காரைக்குடி அம்மன் சன்னதி தெருவில் உள்ள ரத்தினம் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். அபிமன்யு படேல் தனது கடையை விரிவுப்படுத்தும் வகையில் கடையின் மேல் தளத்தில் கூடுதலாக ஒரு கடை கட்டி தரும்படி ரத்தினமிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் கட்டிடத்தை கட்டிக் கொள்ளுங்கள் என்றும், அதற்கான செலவு தொகையை பின்னர் தருவதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து அபிமன்யு படேலும் ரூ.22 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டிடம் கட்டியுள்ளார். கடை கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அதற்கான செலவு தொகை ரூ.22½ லட்சத்தை தருமாறு ரத்தினமிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை தரமறுத்ததுடன், அந்த கட்டிடத்தை வேறு ஒரு நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளார். இதுகுறித்து கேட்டபோது அபிமன்யு படேலை ஆபாசமாக பேசி கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் ரத்தினம் மீது காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பேராசிரியைக்கு வரதட்சனை கொடுமை கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு
திருமணத்தின்போது, ரூ.3 லட்சம் ரொக்கம், 70 பவுன் நகை, 3லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் சீதனமாக கொடுத்துள்ளனர். இந்தநிலையில் ஆசீர் குடும்பத்தினர் மேலும் ரூ.5 லட்சம் வரதட்சனை கேட்டு கொடுமை படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
2. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக வழக்கு: முருகன், கருப்பசாமி ஜாமீன் உத்தரவு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் சமர்ப்பிப்பு மதுரை சிறையில் இருந்து இருவரும் இன்று வெளிவர வாய்ப்பு
மாணவிகளை தவறான் பாதைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரது ஜாமீன் உத்தரவு நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இன்று இருவரும் மதுரை சிறையிலிருந்து விடுதலை ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3. முதல்–அமைச்சரை விமர்சித்து பேசியதாக அவதூறு வழக்கு: மு.க.ஸ்டாலின் மார்ச் 8–ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும்
முதல்–அமைச்சரை விமர்சித்து பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் மு.க.ஸ்டாலின் மார்ச் 8–ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என திருச்சி கோர்ட்டு உத்தரவிட்டது.
4. இரட்டிப்பு பணம் தருவதாக கூறி மெக்கானிக்கிடம் ரூ.50 ஆயிரம் நூதன மோசடி; பெண் உள்பட 7 பேர் கைது
இரட்டிப்பு பணம் தருவதாக கூறி மெக்கானிக்கிடம் ரூ.50 ஆயிரத்தை நூதன முறையில் மோசடி செய்த பெண் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. தூத்துக்குடியில் கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கு: 2–வது கட்டமாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை
தூத்துக்குடியில் கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு 2–வது கட்டமாக நேற்று விசாரணை நடத்தியது.

ஆசிரியரின் தேர்வுகள்...