மாவட்ட செய்திகள்

நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்ப்பு + "||" + Avoidance of damages due to flooding of water bodies

நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்ப்பு

நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்ப்பு
மாவட்டத்தில் இந்த ஆண்டு கூடுதலாக 200 சதவீதம் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாகவும், நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் தெரிவித்தார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறியதாவது:-
தேனி,


தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவை விட சுமார் 200 சதவீதம் அதிகம் பெய்துள்ளது. மழைக்காலத்தை கருத்தில் கொண்டு மழைக்காலம் தொடங்கும் முன்பே மாவட்டத்தில் நீர்நிலைகளை தூர்வாரும் பணியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், வரத்து வாய்க்கால்கள் முன்கூட்டியே தூர்வாரும் பணிகள் முடிந்த அளவுக்கு மேற்கொள்ளப்பட்டன. அரசுத்துறைகளின் மூலமாகவும், பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மூலமும், பொதுமக்கள் மூலமும் கண்மாய்கள் தூர்வாரும் பணிகள், கரைகள் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனால், அதிக மழைப்பொழிவு ஏற்பட்ட போதிலும் எந்த பகுதியிலும் கரைகள் உடைப்போ, பலத்த மழைச் சேதங்களோ ஏற்படாமல் தவிர்க்கப்பட்டு உள்ளது. கண்மாய்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டதன் மூலம் அந்தந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

தொடர்ந்து நீர்மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். கண்மாய்கள், நீர்வரத்து ஓடைகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவற்றை அகற்றி, தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். தேனி ராஜவாய்க்காலை தூர்வாரும் முயற்சி நடந்து வருகிறது. இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு அடுத்தக்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் எடை, உயரத்தை பெற்றோர்கள் உறுதி செய்யவேண்டும்
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் எடை, உயரம் குறித்து பெற்றோர்கள் நேரில் சென்று பார்வையிட்டு உறுதி செய்யவேண்டும் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவுறுத்தியுள்ளார்.
2. சுருளி அருவி சாரல் விழா குறித்த ஆலோசனை கூட்டம்
சுருளி அருவி சாரல் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
3. போடி பகுதியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
போடி பகுதியில் நடக்கிற பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆய்வு செய்தார்.
4. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
5. ‘ஏற்கனவே உள்ள வழிமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது’
யாரையும் கட்டாயப்படுத்தி ரேஷன் கார்டை மாற்றச் சொல்லவில்லை என்றும், ஏற்கனவே உள்ள வழிமுறைகள் குறித்து தான் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.