மாவட்ட செய்திகள்

வக்கீலை வழிமறித்து கத்தியை காட்டி நகை-பணம் பறிப்பு + "||" + The jewelry-cash flush, showing the knife, guards the lawyer

வக்கீலை வழிமறித்து கத்தியை காட்டி நகை-பணம் பறிப்பு

வக்கீலை வழிமறித்து கத்தியை காட்டி நகை-பணம் பறிப்பு
உறவினருடன் காரில் வந்த வக்கீலை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி நகை, பணத்தை பறித்து சென்ற 16 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லிக்குப்பம்,


கடலூர் கே.என்.பேட்டையை சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 46). வக்கீல். இவர் சம்பவத்தன்று இரவு தனது உறவினர் ஆனந்தி என்பவருடன் ஒரு காரில் பண்ருட்டியில் இருந்து கடலூருக்கு புறப்பட்டார். நெல்லிக்குப்பம் அடுத்த ஓட்டேரி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, சாலையில் நின்ற 4 பேர் கொண்ட கும்பல், அசோக்குமார் ஓட்டி வந்த காரை திடீரென வழிமறித்து, அசோக்குமார், ஆனந்தி ஆகியோரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர்கள் அணிந்திருந்த நகை, கைக்கடிகாரம் மற்றும் ரூ.3 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது. இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை பறித்து சென்ற 4 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் வக்கீலிடம் நகை, பணம் பறித்த 4 பேர் கொண்ட கும்பல் கடலூர் கடற்கரை சாலையில் சுற்றித்திரிவதாக நேற்று முன்தினம் மாலை நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கடலூருக்கு விரைந்து வந்து, அந்த 4 பேர் கொண்ட கும்பலை பிடித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் கடலூர் பில்லாலி தொட்டி தெருவை சேர்ந்த சூர்யா(22), கே.என்.பேட்டை ராஜேஷ் (22) சக்திஆகாஷ் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் என்பதும், கடந்த 7-ந்தேதி உறவினருடன் காரில் வந்த வக்கீல் அசோக்குமாரை வழிமறித்து கத்தியை காட்டி நகை, பணம், கைக்கடிகாரத்தை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. தக்கலை அருகே ஆசிரியைக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து 9 பவுன் நகை பறிப்பு
தக்கலை அருகே ஆசிரியைக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து 9 பவுன் நகையை திருடி சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
2. ஆசி வழங்குவதாக கூறி பணம் பறிப்பு: திருநங்கைகள் உள்பட 3 பேர் கைது
ஆசி வழங்குவதாக கூறி 2 திருநங்கைகளும், ஒரு பெண்ணும் ரூ.5 ஆயிரத்தை பறித்து சென்றுவிட்டனர். இதுதொடர்பாக ஜெயஸ்ரீ பாண்டிபஜார் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார்.
3. மொடக்குறிச்சி அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு ஒருவர் கைது
மொடக்குறிச்சி அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் கத்தி முனையில் பணம் பறித்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. பெண்கள் மீது மயக்க மருந்து தெளித்து ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு
மத்தூர் அருகே பெண்கள் மீது மயக்க மருந்து தெளித்து ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. திண்டிவனத்தில் கத்திமுனையில் ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிப்பு - 3 பேர் கைது
திண்டிவனத்தில் கத்தி முனையில் ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.