மாவட்ட செய்திகள்

குட்கா விவகாரம்: தி.மு.க. கோரியதால் சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது + "||" + Gudka affair: DMK The CBI The investigation is going on

குட்கா விவகாரம்: தி.மு.க. கோரியதால் சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது

குட்கா விவகாரம்: தி.மு.க. கோரியதால் சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது
குட்கா விவகாரம் தொடர்பாக தி.மு.க. கோரியதால் சி.பி.ஐ. விசாரணை நடந்து வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
தூத்துக்குடி, 


தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் உள்ளிட்ட சுருக்கமுறை திருத்த பணிகள் கடந்த 1-ந் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று அனைத்து வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான சிறப்பு முகாம் நடந்தது. அதன்படி புதுக்கோட்டை அருகே உள்ள முடிவைத்தானேந்தலில் சிறப்பு முகாம் நடந்த பகுதிக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ வந்தார். அவர், வாக்காளர் சேர்ப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து பேசினார். தொடர்ந்து புதிய வாக்காளர்களை அதிக அளவில் சேர்க்க அறிவுறுத்தினார். அப்போது, முன்னாள் அமைச்சரும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் என்.சின்னத்துரை மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் 18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர்களாக அதிக அளவில் சேர்க்க வேண்டும். அந்த முனைப்போடு, மாவட்டநிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்படுகிறது. யாரும், யாரையும் மிரட்ட முடியாது. அரசியலில் அச்சுறுத்தி எதையும் சாதிக்க முடியாது. இதுவரை அரசியல் வரலாற்றில் யாரும் அச்சுறுத்தி சாதிக்க முடியாதநிலை உள்ளது.

தி.மு.க. சி.பி.ஐ. விசாரணை கோரியதால், விசாரணை நடந்து வருகிறது. இதை அரசியலாக கருதவில்லை. பா.ஜனதா, தி.மு.க. கூட்டணி இருந்தால் என்றைக்காவது வெளிச்சத்துக்கு வரும் என்று கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. கோவில்பட்டியில் கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கும் விழா
கோவில்பட்டி கூட்டுறவு சங்கங்களில் நடைபெற்ற விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்று, பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கினார்.
2. முதல்-அமைச்சர் வருகை: அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிகாரிகளுடன் ஆலோசனை
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவில்பட்டி வருகையையொட்டி அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
3. அ.தி.மு.க.வின் போராட்டத்தினால் பிரதமர் மோடி உண்ணாவிரதம் இருக்கிறார்; அமைச்சர் கடம்பூர் ராஜூ
அ.தி.மு.க.வின் போராட்டத்தினால் பிரதமர் மோடி உண்ணாவிரதம் இருக்கிறார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருக்கிறார். #AIADMK