மாவட்ட செய்திகள்

ரூ.40 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; வியாபாரி கைது + "||" + 40 thousand tobacco products seized; Businessman arrested

ரூ.40 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; வியாபாரி கைது

ரூ.40 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; வியாபாரி கைது
விளாத்திகுளத்தில் கிட்டங்கியில் பதுக்கி வைத்து இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளாத்திகுளம், 


விளாத்திகுளம் காமராஜர் நகரை சேர்ந்தவர் கனிராஜ். இவருடைய மகன் ஜெயராஜ் (வயது 45). அவர் மிட்டாய், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரி. வெளியூர்களில் இருந்து மொத்தமாக வாங்கி வரும் பொருட்களை விளாத்திகுளம் கீழரத வீதியில் உள்ள கிட்டங்கியில் வைத்து, சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இவருடைய கிட்டங்கியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு, அவைகள் வெளியூர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் நேற்று காலையில் குடோனில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.இதனையடுத்து போலீசார் அந்த புகையிலை பொருட் களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. குடோனில் பதுக்கி வைத்து இருந்த 255 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - உணவு பாதுகாப்பு அதிகாரி நடவடிக்கை
காங்கேயத்தில் குடோனில் பதுக்கி வைத்து இருந்த 255 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரி பறிமுதல் செய்தார்.
2. திருக்கோவிலூரில்: புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அறைக்கு ‘சீல்’ வைப்பு - உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை
திருக்கோவிலூரில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அறையை உணவு பாதுகாப்புத்துறையினர் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
3. மதனபள்ளியில் ரூ.1¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் தந்தை–மகன் கைது
மதனபள்ளியில் ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
4. ரூ.2¼ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
ஈரோட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் ரூ.2¼ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
5. வீட்டில் பதுக்கிய ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்
தேனி அருகே வடபுதுப்பட்டியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...