மாவட்ட செய்திகள்

இடஒதுக்கீடு கேட்டு முஸ்லிம்கள் பிரமாண்ட பேரணி : புனேயில் நடந்தது + "||" + Reservation grand rally Muslims by asking in Pune

இடஒதுக்கீடு கேட்டு முஸ்லிம்கள் பிரமாண்ட பேரணி : புனேயில் நடந்தது

இடஒதுக்கீடு கேட்டு முஸ்லிம்கள் பிரமாண்ட பேரணி : புனேயில் நடந்தது
மராட்டியத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமுதாயத்தினர் பெரியளவில் போராட்டம் நடத்தினார்கள்.
புனே,

மராத்தா சமுதாயத்தினர் போராட்டத்தினால் மாநிலமே வன்முறை களமானது. தங்கர் சமுதாயத்தினரும் தங்களை பழங்குடியின (எஸ்.டி.) பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அவர்களும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினார்கள்.

மராத்தா, தங்கர் சமுதாயத்தினரை தொடர்ந்து, மராட்டியத்தில் முஸ்லிம்களும் தங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு போராட முடிவு செய்தனர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி புனேயில் செப்டம்பர் 9-ந் தேதி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர்.

இதன்படி நேற்று புனேயில் முஸ்லிம்கள் பிரமாண்ட பேரணி நடத்தினார்கள். புனே லவஸ் சவுக் பகுதியில் இருந்து தொடங்கிய இந்த பேரணியில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். முக்கிய சாலைகள் வழியாக அவர்கள் புனே கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தனர்.

பேரணி நிறைவில், அவர்கள் புனே கலெக்டரை சந்தித்து இடஒதுக்கீடு தொடர்பான கோரிக்கை மனுவை அவரிடம் அளித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. பிற மாநிலங்களில் எஸ்.சி./எஸ்.டி. என குறிப்பிடாத நிலையில் இடஒதுக்கீடு கோர முடியாது; சுப்ரீம் கோர்ட்டு
எஸ்.சி., எஸ்.டி. சமூக உறுப்பினரின் சாதி பிற மாநிலங்களில் குறிப்பிடப்படாத நிலையில் அவர் அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டு பலன்களை அங்கு கோர முடியாது என சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டு உள்ளது.
2. ‘இடஒதுக்கீடு பிரச்சினைக்கு இடையூறு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்’ : மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
‘தமிழக அரசு 69 சதவீதம் இடஒதுக்கீடு பிரச்சினையில் வலிமையாக வாதிட்டு, அதற்கு இடையூறு ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும்’ என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.