மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 1½ வயது சிறுவன் திடீர் சாவு + "||" + 1½ year old boy who was treated at the Kovilpatti Government hospital suddenly died

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 1½ வயது சிறுவன் திடீர் சாவு

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 1½ வயது சிறுவன் திடீர் சாவு
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 1½ வயது சிறுவன் திடீரென இறந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி, 

கோவில்பட்டியை அடுத்துள்ள இலுப்பையூரணி கூசாலிபட்டி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சங்கையா. தள்ளுவண்டியில் மிச்சர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் சதீஷ்குமார்(வயது1½). இவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. பெற்றோர் அவனை அரசு ஆஸ்பத்திரிக்கு கூட்டி சென்று சிகிச்சை கொடுத்தனர். 2 நாட்களில் காய்ச்சல் குறைந்ததால் அவன் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டான். இந்த நிலையில் மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டதால், கடந்த 5-ந்தேதி வீட்டுக்கு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட அவனுக்கு டாக்டர் ஆலோசனைப்படி ஊசி போடப்பட்டது. பின்னர் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட அவனுக்கு, மறுநாள் காலையில் ஊசி போட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டது. இதற்காக அவனை மீண்டும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் கூட்டி சென்றனர். நேற்று முன்தினம் அவனுக்கு வீக்கத்தை அகற்ற சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் அவன் பரிதாபமாக உயிர் இழந்தான். அவனது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

பின்னர் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக சங்கையா கோவில்பட்டி கிழக்கு போலீசாரிடம் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அவனது உடலை பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த பரிசோதனை அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர்கள் 2 பேர் சாவு
குமாரபாளையம் அருகே, காவிரி ஆற்றில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர்கள் 2 பேர் இறந்தனர்.
2. வீட்டில் தனியாக இருந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை மர்ம சாவு கொலைசெய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
கொள்ளிடம் அருகே வீட்டில் தனியாக இருந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. மயிலம் அருகே: மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சாவு
மயிலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உயிரிழந்தார்.
4. கன்னியாகுமரிக்கு வந்த ரெயிலில் சப்-இன்ஸ்பெக்டர் மர்ம சாவு கழிவறையில் பிணமாக கிடந்தார்
கன்னியாகுமரிக்கு வந்த ரெயிலில் சப்-இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் கழிவறையில் பிணமாக கிடந்தார்.
5. நாட்டு வெடி வெடித்ததில் பள்ளி மாணவன் சாவு தீபாவளி அன்று சோகம்
சேந்தமங்கலம் அருகே தீபாவளி பண்டிகை அன்று மண்ணில் புதைத்து வைத்து கொளுத்திய நாட்டு வெடி திடீரென்று வெடித்ததில் பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.