மாவட்ட செய்திகள்

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடந்தது வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் + "||" + Special Camp to edit the Electoral List of All Votes

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடந்தது வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடந்தது வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 1,594 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடந்தது. மீண்டும் வருகிற 23-ந் தேதி முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி, 


தேர்தல் ஆணைய உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் கடந்த 1-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்கும் வாக்காளர்கள் உரிய விண்ணப்ப படிவங்களை சமர்ப்பித்தனர்.

இந்த முகாமை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று ஆய்வு செய்தார். அவர் தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி, ஹோலிகிராஸ் தொடக்கப்பள்ளி, புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பி.எம்.சி.மேல்நிலைப்பள்ளி, ஓட்டப்பிடாரம் மாரியப்பநாடார் நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்தார். அப்போது, வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வருகை தந்துள்ளனரா என்பதையும், போதிய விண்ணப்ப படிவங்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, தூத்துக்குடி தாசில்தார் சிவகாம சுந்தரி, தூத்துக்குடி வட்ட தேர்தல் துணை தாசில்தார் ரம்யாதேவி ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்பட்டியல் சுருக்க முறை திருத்த பணிகள் நடந்து வருகிறது. இதில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் உள்ள 1,594 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதே போன்று 23-9-2018, 7-10-2018, 14-10-2018 ஆகிய நாட்களிலும் சிறப்பு முகாம் நடக்கிறது.

இந்த முகாம்களில் மனுக்கள் பெறப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தத்துக்கு பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களும் இந்த பணிகளை ஆய்வு செய்ய வருகை தர உள்ளனர்.

எனவே தூத்துக்குடி மாவட்ட மக்கள் இந்த முகாமை பயன்படுத்தி 100 சதவீதம் முழுமையான வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. பசுமை பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்ட 48 தலைமை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் - கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்
பசுமை பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்ட 48 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சான்றிதழை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
2. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விடுபட்ட பதிவை புதுப்பிக்க வாய்ப்பு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் 2011-16-ம் ஆண்டு காலகட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் மீண்டும் விடுபட்ட தங்கள் பதிவை புதுப்பித்து கொள்ளலாம்.
3. திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா: 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக, கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.
4. கோவில்பட்டியில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு
கோவில்பட்டியில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டார்.
5. தூத்துக்குடி மாநகராட்சியில் “கொசுப்புழு இல்லாத இல்லம்” சான்று வழங்கும் திட்டம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாநகராட்சியில் “கொசுப்புழு இல்லாத இல்லம்” சான்று வழங்கும் திட்டத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று தொடங்கி வைத்தார்.