மாவட்ட செய்திகள்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு: பேராசிரியை நிர்மலாதேவி உள்பட 3 பேருக்கு காவல் நீட்டிப்பு + "||" + Case pupils were invited to a wrong path: 3 Professors, including Nirmaladevi Custody extension

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு: பேராசிரியை நிர்மலாதேவி உள்பட 3 பேருக்கு காவல் நீட்டிப்பு

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு: பேராசிரியை நிர்மலாதேவி உள்பட 3 பேருக்கு காவல் நீட்டிப்பு
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு வருகிற 14–ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர்,

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் பேராசிரியர்கள் முருகன் கருப்பசாமி ஆகியோர் நேற்று காவல் நீட்டிப்புக்காக விருதுநகர் 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

அவர்கள் 3 பேருக்கும் வருகிற 14–ந் தேதி வரை காவலை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைக்க கொண்டு சென்றனர்.

இந்த வழக்கில் இரு கட்டங்களாக 1360 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் வருகிற 14–ந் தேதி இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகிய 3 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படும் என கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. மாணவிகளிடம் சில்மி‌ஷம் புகார்: பேராசிரியரை பணியிடநீக்கம் செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம்
மாணவிகளை சில்மி‌ஷம் செய்ததாக புகாரில் சிக்கிய பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்யக்கோரி உயர்கல்வி இயக்குனர் அலுவலகத்தை மாணவ–மாணவிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
2. பேராசிரியைக்கு வரதட்சனை கொடுமை கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு
திருமணத்தின்போது, ரூ.3 லட்சம் ரொக்கம், 70 பவுன் நகை, 3லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் சீதனமாக கொடுத்துள்ளனர். இந்தநிலையில் ஆசீர் குடும்பத்தினர் மேலும் ரூ.5 லட்சம் வரதட்சனை கேட்டு கொடுமை படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
3. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக வழக்கு: முருகன், கருப்பசாமி ஜாமீன் உத்தரவு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் சமர்ப்பிப்பு மதுரை சிறையில் இருந்து இருவரும் இன்று வெளிவர வாய்ப்பு
மாணவிகளை தவறான் பாதைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரது ஜாமீன் உத்தரவு நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இன்று இருவரும் மதுரை சிறையிலிருந்து விடுதலை ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4. விபத்தில் இறந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.35 லட்சம் நஷ்டஈடு தஞ்சை கோர்ட்டு உத்தரவு
விபத்தில் இறந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.35 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என தஞ்சை கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
5. தேர்தல் தொடர்பான பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும் தலைமை தேர்தல் அலுவலர் உத்தரவு
தேர்தல் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...