மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு கொலை மிரட்டல் + "||" + admk Murder threat to the Union Secretary

அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு கொலை மிரட்டல்

அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு கொலை மிரட்டல்
தியாகதுருகம் அருகே அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் அருகே உள்ள சூளாங்குறிச்சியை சேர்ந்தவர் அருணகிரி (வயது 42), ரிஷிவந்தியம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பழையசிறுவங்கூரை சேர்ந்த தயாளரெட்டி மகன் தண்டபாணி என்பவர் அருணகிரியை செல்போனில் தொடர்பு கொண்டு, ராமராஜபுரம் கால்வாயை தூர்வாருவது தொடர்பாக பேசினார். 

பின்னர் சம்பவத்தன்று தண்டபாணி, பள்ளிப்பட்டை சேர்ந்த வேலாயுதத்துடன் சேர்ந்து கொண்டு ராமராஜபுரம் கால்வாயை ஏன் தூர்வாரவில்லை என செல்போனில் கேட்டு ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தண்டபாணி, வேலாயுதம் ஆகிய 2 பேர் மீது தியாகதுருகம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. கத்தியைக் காட்டி மிரட்டி லாரி அதிபரிடம் பணம், செல்போன் பறிப்பு; 2 வாலிபர்கள் கைது
கொம்பாக்கத்தில் லாரி அதிபரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம், செல்போன் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. ‘பொதுச்செயலாளரே, அ.தி.மு.க.வின் ஒரே அடையாளம்’ டெல்லி ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் தரப்பினர் வாதம்
அ.தி.மு.க.வின் ஒரே அடையாளமாக இருப்பது பொதுச்செயலாளரும், அந்த பதவிக்கான தேர்தலும் ஆகும் என இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டி.டி.வி.தினகரன் தரப்பினர் டெல்லி ஐகோர்ட்டில் வாதிட்டனர்.
3. அனுமதி இல்லாமல் பட்டாசு வெடித்த வழக்கு: அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேருக்கு தலா ரூ.1000 அபராதம்
கோவையில் அனுமதி இல்லாமல் பட்டாசு வெடித்த வழக்கில் அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேருக்கு தலா ரூ.1000 அபராதம் விதித்து கோவை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
4. தமராக்கியில் வீடுகளை சேதப்படுத்திய வழக்கு 4 பெண்கள் உள்பட 11 பேர் கைது
தமராக்கியில் வீடுகளை சேதப்படுத்திய வழக்கில் 4 பெண்கள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. நிலத்தகராறில் கழுத்தை அறுத்து விவசாயி கொலை: அண்ணன் மகன் கைது
மதுக்கூர் அருகே நில தகராறில் கழுத்தை அறுத்து விவசாயி கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவருடைய அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர்.