மாவட்ட செய்திகள்

மதுரையில் தண்ணீர் லாரி மோதி லிப்ட் கேட்டு சென்ற மாணவன் பலி + "||" + Water lorry kills student

மதுரையில் தண்ணீர் லாரி மோதி லிப்ட் கேட்டு சென்ற மாணவன் பலி

மதுரையில் தண்ணீர் லாரி மோதி லிப்ட் கேட்டு சென்ற மாணவன் பலி
மதுரையில் மோட்டார் சைக்கிள் மீது தண்ணீர் லாரி மோதியதில் லிப்ட் கேட்டு சென்ற பிளஸ்–2 மாணவன் உடல் நசுங்கி பலியானார்.

மதுரை,

மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன். இவருடைய மகன் அஜீத் (வயது 17). இவர் தல்லாகுளம் போலீஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். நேற்று காலை இவர் பள்ளிக்கு செல்ல ஒத்தக்கடையில் பஸ்சில் ஏறி மாவட்ட கோர்ட்டு பகுதியில் இறங்கி நடந்து சென்றார்.

அப்போது பள்ளிக்கு விரைந்து செல்வதற்காக அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற விக்னேஷ் என்பவரிடம் லிப்ட் கேட்டார். அவரும் அஜீத்தை ஏற்றிக்கொண்டு பாண்டியன் ஓட்டல் பின்புறம் நத்தம் சாலையில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மாநகராட்சி ஒப்பந்த தண்ணீர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் கீழே விழுந்தனர். அப்போது லாரியின் டயர் அஜித் உடலில் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் விக்னேஷ் காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

தகவல் அறிந்ததும் தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவர் கோவிந்தராஜ்(39) என்பவரை கைது செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தீவிரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் பலி: தஞ்சையில் பல்வேறு அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம்
தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான ராணுவவீரர்களுக்காக தஞ்சையில் பல்வேறு அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர்.
2. மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய 3 சிறுவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்
மோட்டார்சைக்கிள் விபத்தில் சிக்கிய 3 சிறுவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அனுப்பி வைத்தார்.
3. குளித்தலை அருகே லாரி மீது அரசு பஸ் மோதல்; பெண் பலி 14 பேர் காயம்
குளித்தலை அருகே லாரி மீது அரசு பஸ் மோதியதில் பெண் பரிதாபமாக இறந்தார். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.
4. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருமண கோஷ்டியினரின் கார் மீது பஸ் மோதல்; மணமகனின் தம்பி பலி 10 பேர் படுகாயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருமண கோஷ்டியினர் சென்ற காரும் அரசு பஸ்சும் மோதிக்கொண்டதில் மணமகனின் தம்பி உயிரிழந்தார். 10 பேர் படுகாயம் அடைந்தார்கள்.
5. பர்கூர் அருகே விபத்து: லாரி-மோட்டார்சைக்கிள் மோதி 2 பேர் பலி 3 பேர் படுகாயம்; 100 ஆடுகள் செத்தன
பர்கூர் அருகே லாரி - மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் லாரியில் இருந்த 100 ஆடுகள் செத்தன.