மாவட்ட செய்திகள்

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Request to fill in workplaces Pharmaceuticals demonstrated

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம்

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர்கள் சங்கத்தின் சார்பில் மதுரை பெரிய ஆஸ்பத்திரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை,

தமிழகம் முழுவதும் காலியாக இருக்கும் மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மருந்து கிடங்குகளில் தலைமை மருந்தாளுனர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்க வேண்டும். தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் கீழ் இயங்கும் மருந்து கிடங்குகளில் மருந்து கிடங்கு அலுவலர்களை நியமிக்க வேண்டும். நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும். காசநோய் பிரிவில் பணியாற்றும் மருந்தாளுனர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர்கள் சங்கத்தின் சார்பில் மதுரை பெரிய ஆஸ்பத்திரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 மாவட்ட தலைவர் ரத்தினசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்து கண்டன உரை நிகழ்த்தினர். இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர்.

 இதுகுறித்து மாவட்ட தலைவர் ரத்தினசாமி கூறுகையில், தமிழகம் முழுவதும் ஏராளமான காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. இதனை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடக்கிறது. பொதுமக்கள், நோயாளிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் நாங்கள் போராடி வருகிறோம். எங்களின் நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. விசாரணை என்கிற பெயரில் மயக்க ஊசி போட்டு துன்புறுத்தியதாக வனத்துறையினரை கண்டித்து மலை வாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
விசாரணை என்கிற பெயரில் மயக்க ஊசி போட்டு துன்புறுத்தியதாக வனத்துறையினரை கண்டித்து பொள்ளாச்சியில் மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டம்
2. மழைநீருடன் கழிவுநீர் கலந்து நிற்பதற்கு எதிர்ப்பு: பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
மழைநீருடன் கழிவுநீர் கலந்து நிற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம் தாசில்தாரை கண்டித்து, கடலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. குட்கா ஊழலை கண்டித்து ஈரோட்டில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
குட்கா ஊழலை கண்டித்து ஈரோட்டில் தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
5. கோவையில் ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர்கள் பதவி விலக கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர்கள் பதவி விலக கோரி கோவையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.