மாவட்ட செய்திகள்

மனைவியை கத்தியால் வெட்டிய தொழிலாளி கைது + "||" + Worker arrested by knife knife

மனைவியை கத்தியால் வெட்டிய தொழிலாளி கைது

மனைவியை கத்தியால் வெட்டிய தொழிலாளி கைது
பெண்ணாடத்தில் மனைவியை கத்தியால் வெட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

பெண்ணாடம், 

பெண்ணாடம் சோழன்நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 37). தொழிலாளி. இவருடைய மனைவி செந்தமிழ் (26). பாலமுருகன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று பாலமுருகன் மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த செந்தமிழ், ஏன் மதுகுடிக்கிறீர்கள் என கேட்டு பாலமுருகனை கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த பாலமுருகன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து செந்தமிழ் தலையில் வெட்டி, அவரை ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த செந்தமிழ் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது.

இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலீஸ் நிலையம் முன்பு ‘டிக்–டாக் வீடியோ’; வியாபாரி கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலீஸ் நிலையம் முன்பு வீடியோ படம் எடுத்து டிக்–டாக் வீடியோ வெளியிட்ட வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
2. தென் பெண்ணையாற்றில் இருந்து காரில் மணல் கடத்திய வாலிபர் கைது
பாகூர் அருகே தென் பெண்ணை ஆற்றில் இருந்து காரில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
3. பேரையூர் அருகே போலீஸ் நிலையம் முன்பு ‘டிக்–டாக்’ வீடியோ எடுத்த 2 பேர் கைது
சாப்டூர் போலீஸ் நிலையம் முன்பு ‘டிக்–டாக்’ ஆப் மூலம் வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்த 2 வாலிபர்களை சாப்டூர் போலீசார் கைது செய்தனர்.
4. தென்பெண்ணை ஆற்று பகுதியில் சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தல் வாலிபர் கைது
தென்பெண்ணை ஆற்று பகுதியில் நூதன முறையில் சாக்கு மூட்டைகளில் மணல் கடத்திய வாலிபரை கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
5. நிலத்தை அளவீடு செய்து கொடுக்க ரூ.65 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது
நிலத்தை அளவீடு செய்து கொடுக்க ரூ.65 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கைது செய்யப்பட்டார்.