மாவட்ட செய்திகள்

ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை + "||" + Women's siege at RK Pattai panchayat union office

ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை
பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட செல்லாத்தூர் மற்றும் செல்லாத்தூர் காலனியை சேர்ந்த 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் நேற்று ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பள்ளிப்பட்டு,

ஆர்.கே.பேட்டை ஊராட்சியில் தங்கள் கிராமத்தை தவிர மற்ற பகுதி மக்களுக்கு 100 நாள் பணிகள் வழங்குவதாகவும், தங்களுக்கு பணி வழங்காமல் தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதாகவும் கூறி அவர்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆர்.கே.பேட்டை போலீசார், ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்(திட்டம்)பாபு ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானம் செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து இது தொடர்பாக கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி பாபு, இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.