மாவட்ட செய்திகள்

ராஜீவ் கொலையாளிகளுக்கு விடுதலை: தமிழக அமைச்சரவை முடிவினை கவர்னர் ஏற்பார் - நாராயணசாமி நம்பிக்கை + "||" + Release of Rajiv killers: The Cabinet decision was taken by the Governor

ராஜீவ் கொலையாளிகளுக்கு விடுதலை: தமிழக அமைச்சரவை முடிவினை கவர்னர் ஏற்பார் - நாராயணசாமி நம்பிக்கை

ராஜீவ் கொலையாளிகளுக்கு விடுதலை: தமிழக அமைச்சரவை முடிவினை கவர்னர் ஏற்பார் - நாராயணசாமி நம்பிக்கை
ராஜீவ்காந்தி கொலையில் தொடர்புடையவர்களை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவையின் முடிவினை கவர்னர் ஏற்பார் என்று நம்புவதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுவையில் கடந்த மாதம் லிட்டர் ரூ.70 ஆக இருந்த பெட்ரோல் விலை ரூ.80 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் டீசலும் ரூ.74 ஆக அதிகரித்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலிருந்தபோது சமையல் கியாஸ் சிலிண்டருக்கு வழங்கிய மானியத்தையும் பாரதீய ஜனதா அரசு ரத்துசெய்துவிட்டது.

இதனால் ஏழை, நடுத்தர மக்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து முழுஅடைப்பு போராட்டத்துக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு பொதுமக்களும் தாமாக முன்வந்து ஆதரவு தந்ததால் முழுஅடைப்பு வெற்றிபெற்றுள்ளது.

அரசியல் கட்சிகள் முழுஅடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்க முழு உரிமை உண்டு. ஆனால் கடைகளை அடைக்க சொல்லி வற்புறுத்தக்கூடாது. கோரிக்கையை ஏற்பதும், நிராகரிப்பதும் அவரவர் முடிவு. சட்டம்–ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அமைச்சரவை முடிவு செய்து கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது. அவர்களை விடுதலை செய்வதில் ஆட்சேபனையில்லை என்று ராகுல்காந்தியும், பிரியங்காவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளனர். தமிழக அமைச்சரவையின் முடிவினை ஏற்று அவர்களை விடுவிக்க கவர்னர் உத்தரவு பிறப்பிப்பார் என்று நம்புகிறேன்.

அவர்களது விடுதலையில் எனக்கு தனிப்பட்ட கருத்து உள்ளது. ஆனாலும் ராகுல்காந்தியின் கருத்தை ஏற்பது எனது கடமை. இந்த வி‌ஷயத்தில் தமிழக கவர்னர் விரைவில் முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. வில்லியனூர் அருகே கர்ப்பிணி கொலையில் கைதானவர் சிறையில் அடைப்பு
வில்லியனூர் அருகே கழுத்தை அறுத்து கர்ப்பிணி கொலை செய்யப்பட்டதில் கைதானவர் சிறையில் அடைக்கப்பட்டார். தோஷம் கழிப்பதாக கூறி ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்களிடம் அவர் பணம் பறித்ததும் அம்பலமானது.
2. காங்கிரஸ் பிரமுகர் கொலையில் கைதான கூட்டாளியுடன் ரவுடி டிராக் சிவா சிறையில் அடைப்பு
புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் கொலையில் கைதான ரவுடி டிராக் சிவா, அவரது கூட்டாளியுடன் சிறையில் அடைக்கப்பட்டார்.
3. அ.தி.மு.க. நிர்வாகி கொலை: 4 பேரிடம் விடிய, விடிய விசாரணை
ஓசூர் அ.தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் பிடிபட்ட 4 பேரிடமும் விடிய, விடிய போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
4. நடுவானில் பயணிகள் பாதிப்பு: விமான ஊழியர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும்
நடுவானில் பயணிகள் பாதிக்கப்பட்டதற்கு காரணமான ஜெட் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் போலீசில் புகார் மனு அளித்தார்.
5. கவுரவ கொலையால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா பெண்ணை சந்தித்தார், கவுசல்யா
கவுரவ கொலையால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா பெண் அம்ருதாவை கவுசல்யா சந்தித்து பேசினார்.