மாவட்ட செய்திகள்

முழுஅடைப்பு போராட்டம்: தமிழகத்தில் 70 சதவீத லாரிகள் ஓடவில்லை + "||" + Full struggle In TamilNadu 70 percent of the trucks did not run

முழுஅடைப்பு போராட்டம்: தமிழகத்தில் 70 சதவீத லாரிகள் ஓடவில்லை

முழுஅடைப்பு போராட்டம்: தமிழகத்தில் 70 சதவீத லாரிகள் ஓடவில்லை
தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக நேற்று சுமார் 70 சதவீத லாரிகள் ஓடவில்லை என சம்மேளன செயலாளர் தன்ராஜ் கூறினார்.
நாமக்கல்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆகியவை ஆதரவு தெரிவித்து இருந்தன.

இதனால் நேற்று தமிழகம் முழுவதும் பெரும்பாலான லாரிகள் இயக்கப்படவில்லை. எனவே பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் தன்ராஜ் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே டீசல் விலையை குறைக்கக்கோரி பலமுறை போராட்டங்களை நடத்தி உள்ளோம். அந்த வகையில் தான் காங்கிரஸ் கட்சி அறிவித்த முழு அடைப்பு போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்து இருந்தோம்.

சம்மேளனம் ஆதரவு தெரிவித்து இருந்ததால் தமிழகம் முழுவதும் சுமார் 70 சதவீத லாரிகள் நேற்று ஓடவில்லை. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு மட்டும் சுமார் ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் தமிழகம் முழுவதும் சுமார் 90 சதவீத மணல் லாரிகள் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்கப்படவில்லை என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி கூறினார்.

முட்டை லாரிகளை பொறுத்தவரையில் தினசரி மாலை நேரத்தில் தான் லோடு ஏற்றிக்கொண்டு வெளிமாநிலங்களுக்கு புறப்படும். எனவே முட்டைகளை வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு கொண்டு செல்வதில் பாதிப்பு ஏற்படவில்லை என தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சின்ராஜ் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 550 ‘நீட்’ தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
வரும் கல்வியாண்டு முதல் 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும். தமிழகத்தில் 550 ‘நீட்‘ தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
2. ஒருங்கிணைந்த கட்டிட விதிகளை முதல்-அமைச்சர் வெளியிட்டார்: தமிழகத்தில் குறைந்த விலையில் வீடுகள் கிடைக்கும்
தமிழ்நாடு ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதன் மூலம் தமிழகத்தில் குறைந்த விலையில் வீடுகள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
3. சென்னை, திருச்சி உள்பட 5 நகரங்களை இணைக்கும் திட்டம் தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி முதலீடு நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார்
சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 5 நகரங்களை இணைக்கும் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தட திட்டத்தை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ரூ.3,038 கோடி முதலீடு செய்யப்படுகிறது.
4. தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 31-ந் தேதி வெளியிடப்படும் தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 31-ந் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார்.
5. தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படுகிறது தேசிய சுகாதார திட்ட இயக்குனர் தகவல்
தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தேசிய சுகாதார திட்ட இயக்குனர் தரேஸ் அகமது தெரிவித்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...