மாவட்ட செய்திகள்

முழு அடைப்பில் பங்கேற்காதது எங்களின் சொந்த முடிவுசிவசேனா சொல்கிறது + "||" + Our own decision is not to participate in the whole package Says Shiv Sena

முழு அடைப்பில் பங்கேற்காதது எங்களின் சொந்த முடிவுசிவசேனா சொல்கிறது

முழு அடைப்பில் பங்கேற்காதது எங்களின் சொந்த முடிவுசிவசேனா சொல்கிறது
பா.ஜனதா தலைவர்கள் முழு அடைப்பில் கலந்துகொள்ள வேண் டாம் என எங்களுக்கு கோரிக்கை ஏதும் விடுக்கவில்லை. இது எங்கள் கட்சியின் சொந்த முடிவு என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் கூறியுள்ளார்.
மும்பை,

மத்திய மற்றும் மராட்டிய அரசின் கூட்டணியில் அங்கம் வகித்தாலும் பா.ஜனதாவின் செயல்பாடுகளை சிவசேனா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதேபோல் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி, முழு அடைப்பில் கலந்துகொள்ள சிவசேனாவுக்கும் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் முழு அடைப்பில் சிவசேனா கலந்து கொள்ளவில்லை.

இந்தநிலையில் முழு அடைப்பு போராட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து நேற்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவுத் வெளியிட்ட தகவலில் கூறியபோது, “பா.ஜனதா தலைவர்கள் யாரும் முழு அடைப்பு போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டாம் என எங்களுக்கு கோரிக்கை விடுக்கவில்லை. முழு அடைப்பில் அங்கம் வகிக்காதது சிவசேனாவின் சொந்த முடிவு ஆகும்” என கூறினார்.

மேலும் இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் கூறியிருப்பதாவது:-

பலத்தை பார்க்கவேண்டும்...

மக்கள் பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் சுமக்கவேண்டிய சுமையை நாங்கள் இதுவரை சுமந்துகொண்டு இருந்தோம். தற்போது எதிர்க்கட்சிகளின் பலத்தை நாங்கள் பார்க்கவேண்டிய நேரம் வந்துள்ளது. எதிர்க்கட்சிகள் முழு ஈடுபாட்டுடன் தங்கள் கடமையை செய்யும்போது தான் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன.

நாட்டில் நிலவும் பணவீக்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவற்றை மக்கள் உன்னிப்பாக கவனித்து க்கொண்டுதான் இருக் கிறார்கள். இதேபோல் மக்கள் பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் நீண்ட தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டு, திடீரென முழு அடைப்பு அறிவித்ததுபோல அவர்களுக்கு தோன்றாது என்று நாங்கள் நம்புகிறோம்.

சில எதிர்க்கட்சிகள் மக்கள் பிரச்சினையில் தாங்கள் எங்கு நின்று கொண்டி ருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.