மாவட்ட செய்திகள்

நெல்லையில் காங்கிரஸ்-கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Congress-coalition parties demonstrated at Nellai

நெல்லையில் காங்கிரஸ்-கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் காங்கிரஸ்-கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் நேற்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை, 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று தேசிய அளவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தலைவர் சிவகுமார் முன்னிலை வகித்தார். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அப்போது அவர் கூறுகையில், “பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது. பெட்ரோல் விலை ரூ.100-ஐ நோக்கி உயர்ந்து கொண்டிருக்கிறது.

இதை கண்டித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி உத்தரவுப்படி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுத்து நிறுத்தி, கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இல்லை என்றால் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும்” என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்த தி.மு.க. நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், எம்.எல்.ஏ..க்கள் மைதீன்கான், லட்சுமணன், காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, முன்னாள் பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வி.பி.துரை, பொருளாளர் ராஜேஷ் முருகன், மாநில செயலாளர் காவேரி, மண்டல தலைவர் தனசிங் பாண்டியன், பொதுச்செயலாளர் சொக்கலிங்ககுமார்,

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நிஜாம், ராஜேந்திரன், மனித நேய மக்கள் கட்சி கே.எஸ்.ரசூல் மைதீன், ஜமால், த.மு.மு.க. பிலால், எஸ்.டி.பி.ஐ. கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் ஹயாத், ஆதித்தமிழர் பேரவை கலைக்கண்ணன் மற்றும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
2. பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளது.
3. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைவு, வாகன ஓட்டிகள் நிம்மதி
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளது வாகன ஓட்டிகளுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.
4. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்துள்ளது. டீசல் விலையும் குறைந்தது.
5. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்கு முகம் ! வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 15 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.