மாவட்ட செய்திகள்

வேட்டவலத்தில் பரபரப்பு: அரசு பஸ்சில் திடீர் தீ விபத்து + "||" + In vettavalam Furore: A sudden fire accident on state bus

வேட்டவலத்தில் பரபரப்பு: அரசு பஸ்சில் திடீர் தீ விபத்து

வேட்டவலத்தில் பரபரப்பு: அரசு பஸ்சில் திடீர் தீ விபத்து
வேட்டவலத்தில் அரசு பஸ்சில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
வேட்டவலம்,

வேட்டவலத்தில் அரசு பஸ் ஒன்று கடைவீதியில் நேற்று காலை 7.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது. பழைய போலீஸ் நிலையம் அருகில் வந்தபோது பஸ்சில் திடீரென தீப்பிடித்தது. உடனே கீழே இருந்து பார்த்த பொதுமக்கள் டிரைவரிடம் இதுகுறித்து தெரிவித்தனர். உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.

இந்த தீயினால் பஸ்சில் ஒரே புகை மண்டலமாக காணப்பட்டது. உடனே அவசர அவசரமாக பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறி அடித்தப்படி கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அருகில் இருந்த கடைகளில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் டீசல் டேங்க் அருகே தீ எரிந்து கொண்டிருந்தது.

இதனால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பஸ்சில் மேலும் தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தடுத்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானில் சாலை அமைக்கும் எந்திரங்களை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு
திருவாரூர் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்காமல் எடுத்து செல்லப்பட்ட எந்திரங்கள், லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. கந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க முயன்ற பேக்கரி உரிமையாளர் கைது ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு
கந்துவட்டி கொடுமையால் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பேக்கரி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
3. சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்
கோத்தகிரி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.
5. கடனாக கொடுத்த ரூ.5 லட்சத்தை திரும்ப கேட்டதால் பைனான்சியரை அடித்துக் கொலை செய்தோம் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்
கடனாக கொடுத்த பணம் ரூ.5 லட்சத்தை வட்டியுடன் திரும்ப கேட்டதால் ஏற்பட்ட தகராறில் பைனான்சியரை கொலை செய்ததாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை