மாவட்ட செய்திகள்

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து சாவு + "||" + The woman who fell on a motorcycle with her husband fell and died

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து சாவு

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து சாவு
நாங்குநேரி அருகே, கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து இறந்தார். நாய் குறுக்கே பாய்ந்ததால் இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
நாங்குநேரி, 


நாங்குநேரியை சேர்ந்தவர் முருகன் (வயது 50). அவருடைய மனைவி நாச்சியார் (45). இருவரும் நாங்குநேரி- களக்காடு ரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் உணவகம் நடத்தி வருகின்றனர். நேற்று மாலையில் உணவக வேலை முடிந்ததும் கல்லூரியில் இருந்து புறப்பட்டு இருவரும் மோட்டார்சைக்கிளில் நாங்குநேரியை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

நாங்குநேரி அருகே கலுங்கடி என்ற இடத்தில் வந்த போது திடீரென மோட்டார்சைக்கிளின் குறுக்கே நாய் பாய்ந்தது. இதனால் நாய் மீது மோதாமல் இருப்பதற்காக முருகன் தனது மோட்டார்சைக்கிளை பிரேக் பிடித்தார். இதனால் மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறியது.
இதனால் மோட்டார்சைக்கிளில் அவருக்கு பின்னால் இருந்த நாச்சியார் தவறி ரோட்டில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன், மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். நாச்சியாரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கணவர் கண் முன்னே மனைவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதல்: தந்தை-மகள் படுகாயம்
கோவில்பட்டியில் ஆட்டோ மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தையும், மகளும் படுகாயம் அடைந்தனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற ஆட்டோ டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.
2. தங்க சங்கிலி என்று நினைத்து மஞ்சள் கயிறை பறிக்க முயன்ற வாலிபர்
நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி என்று நினைத்து மஞ்சள் கயிறை பறிக்க முயன்ற வாலிபர் பிடிபட்டார். அவரை பொதுமக்கள் சுற்றி வளைத்து தாக்கினர்.
3. அரிவாளால் வெட்டப்பட்ட டெய்லர் சிகிச்சை பலனின்றி சாவு
திருப்பத்தூர் அருகே அரிவாளால் வெட்டப்பட்ட டெய்லர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. கங்கைகொண்டான் அருகே வேன் கவிழ்ந்து டிரைவர்-பெண் பலி
கங்கைகொண்டான் அருகே வேன் கவிழ்ந்து டிரைவரும், ஒரு பெண்ணும் பரிதாபமாக இறந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. நிர்மலா தேவி, என் கணவரை 3 முறை சந்தித்து உள்ளார் - உதவி பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா
நிர்மலா தேவி, என் கணவரை 3 முறை சந்தித்து உள்ளார் என உதவி பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா கூறி உள்ளார். #NirmalaDeviCase