மாவட்ட செய்திகள்

மக்களின் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் + "||" + Remove the Tasmak shop which is open to people's opposition

மக்களின் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்

மக்களின் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்
தேனியில் மக்களின் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம், பெருந்தலைவர் காமராஜர் நற்பணி இயக்கத்தினர் மனு அளித்தனர்.
தேனி,


தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு குறைகள், கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் அளித்தனர்.

இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பெருந்தலைவர் காமராஜர் நற்பணி இயக்கத்தின் தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் நிர்வாகிகள் ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில், ‘தேனி காமராஜர் பஸ் நிலையம் எதிரே மதுரை சாலையில் டாஸ்மாக் கடை அமைக்க பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்களும் மனு அளித்து இருந்தோம். எதிர்ப்புகளை எல்லாம் மீறி அதே இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு உள்ளது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இந்த கடை உள்ளது. உணவகம், கடைகள், மருந்துகடைகள், மருத்துவமனைகள் அமைந்துள்ள பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, இந்த கடையை அகற்ற வேண்டும்‘ என்று கூறியிருந்தனர்.

இதேபோல் தேனி மாவட்ட வர்த்தகர் காங்கிரஸ் நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘தேனி நகரின் மையப்பகுதியில் பலரும் பயன்பெறும் வகையில் காமராஜர் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கு காமராஜர் பெயரில் ஆர்ச் போன்ற வளைவு அமைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். இதை நாங்களே எங்கள் செலவில் செய்வதற்கு தயாராக உள்ளோம். அதற்கு உரிய அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

பெரியகுளம் ஒன்றியம் முதலக்கம்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை. குடிநீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளது. பொது கழிப்பிட வசதி இல்லை. எனவே இங்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘கைலாசப்பட்டி கிராமத்தில் பாப்பிபட்டி கண்மாய் உள்ளது.

புதர் மண்டி கிடக்கும் இந்த கண்மாயை நம்பி விவசாயம் செய்து வருகிறோம். கண்மாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இந்த கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ‘கஜா’ புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரும் மனு மீது அவசர விசாரணை; மத்திய–மாநில அரசுகளுக்கு, ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
‘கஜா’ புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரும் மனுவை அவசர வழக்காக மதுரை ஐகோர்ட்டு நேற்று எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தியது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
2. கருங்கல் பேரூராட்சியில் புதிய டாஸ்மாக் கடைக்கு அனுமதியளிக்க கூடாது கலெக்டரிடம் மனு
கருங்கல் பேரூராட்சியில் புதிய டாஸ்மாக் கடைக்கு அனுமதியளிக்க கூடாது என்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
3. பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், பருத்தியில் பூச்சி தாக்குதல் கள ஆய்வு நடத்த வலியுறுத்தி கலெக்டரிடம் மனு
பெரம்பலூர் தாலுகா அய்யலூர் குடிக்காடு கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், பருத்தி ஆகியவை பூச்சி தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு கள ஆய்வு நடத்த அதிகாரிகள் வர வலியுறுத்தி விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
4. குறைதீர்க்கும் நாள் கூட்டம்: குளித்தலையில் புதிய பஸ் நிலையம் அமைக்க கலெக்டரிடம் இளைஞர்கள் மனு
குளித்தலையில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இளைஞர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
5. தனித்தொகுதி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் சட்டப்பிரிவுகளை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி
தனித்தொகுதி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதற்கான சட்டப் பிரிவுகளை ரத்து செய்யக்கோரும் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.