மாவட்ட செய்திகள்

பங்கு வர்த்தக நிறுவனத்தில் அதிகாரி வேலை + "||" + Officer job at the stock trading company

பங்கு வர்த்தக நிறுவனத்தில் அதிகாரி வேலை

பங்கு வர்த்தக நிறுவனத்தில் அதிகாரி வேலை
தேசிய பங்கு வர்த்தக பாதுகாப்பு வாரியம் சுருக்கமாக ‘செபி’ எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ‘கிரேடு-ஏ’, தரத்திலான அதிகாரி பணிக்கு 120 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பொது பிரிவில் 84 பேரும், சட்டப் பிரிவில் 18 பேரும், ஐ.டி. பிரிவில் 8 பேரும், சிவில் பிரிவில் 5 பேரும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 5 பேரும் சேர்க்கப்படுகிறார்கள்.

சி.ஏ., சி.எஸ்., சி.டபுள்யு.ஏ., முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பொதுப் பிரிவு பணிக்கு விண்ணப்பிக்கலாம். சட்டம், ஐ.டி., சிவில், எலக்ட்ரிக்கல் பட்டப்படிப்பு படித்தவர்கள் அந்தந்த பிரிவு பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 31-8-2018-ந் தேதியில், 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு, ஆன்லைன் தேர்வு நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பமுள்ளவர்கள் ரூ.850 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது. இதற்கான இணையதள விண்ணப்பம் 15-9-2018-ந் தேதி செயல்பாட்டிற்கு வரும். விண்ணப்பிக்கும் கடைசி நாள் மற்றும் இதர தேர்வு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.sebi.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசு துறைகளில் 1136 பணியிடங்கள்
மத்திய அரசு துறைகளில் பேஸ்-4 பணியிடங்களுக்கு 1136 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
2. ‘பெல்’ நிறுவனத்தில் 529 பயிற்சிப் பணிகள்
திருச்சி பெல் நிறுவனத்தில் 529 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:
3. நிலக்கரி நிறுவனத்தில் வேலை
மத்திய நிலக்கரி நிறுவனத்தில் 333 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-
4. ராணுவ ஆராய்ச்சி கழகத்தில் வேலை
ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழக நிறுவனம் சுருக்கமாக டி.ஆர்.டி.ஒ. எனப்படுகிறது.
5. கப்பல் தளத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி
மும்பை, நேவல் டாக்யார்டு கப்பல் பணிமனையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 318 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.