மாவட்ட செய்திகள்

நிலக்கரி நிறுவனத்தில் வேலை + "||" + Work in coal company

நிலக்கரி நிறுவனத்தில் வேலை

நிலக்கரி நிறுவனத்தில் வேலை
மத்திய நிலக்கரி நிறுவனத்தில் 333 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-
மத்திய அரசின் சுரங்க வளத்துறையின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் ஒன்று வெஸ்டன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட். மேற்கு மண்டல நிலக்கரி சுரங்கங்களை நிர்வகிக்கும் இந்த அமைப்பில் தற்போது மைனிங் சர்தார், ஷூட் பயரர், டி அண்ட் எஸ். போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 333 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 157 இடமும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 101 இடமும், எஸ்.சி. பிரிவினருக்கு 50 இடமும், எஸ்.டி. பிரிவினருக்கு 25 இடமும் உள்ளது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்...

கல்வித்தகுதி

மைனிங் சர்தார், ஓவர்மேன், மைனிங், மைன் சர்வேயிங் போன்ற டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், கியாஸ் டெஸ்டிங் மற்றும் முதலுதவி சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 31-8-2018-ந் தேதியில் 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினர் 33 வயதுக்குட்பட்டவர்களும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 35 வயதிற்குட்பட்டவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யும் முறை

எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியில் சுய விவர பட்டியல் தயாரித்து தேவையான சான்றுகள் புகைப்படங்கள் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் General Manager (P/Ir) Wester Coalfields Limited. Coal Eastate. Civil Lines. Nagpur 440001 என்ற முகவரிக்கு 27-9-2018-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்துகொள்ளவும் westerncoal.nic.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

1. வேலைவாய்ப்பு செய்திகள்: ரசாயன நிறுவனத்தில்...
கேரளாவில், திருவாங்கூர் உரம் மற்றும் ரசாயன நிறுவனம் (FACT) செயல்படுகிறது.
2. அணுசக்தி நிறுவனத்தில் 324 வேலைகள்
இந்திய அணுசக்தி கழக நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. டிப்ளமோ என்ஜினீயர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
3. இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் 2255 வேலை வாய்ப்புகள் : நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் 2 ஆயிரத்து 255 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. நர்சிங், பார்மசி உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளை படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:-
4. தமிழகத்தில் 580 உதவி வேளாண்மை அதிகாரி பணிகள்
தமிழகத்தில் உதவி வேளாண்மை அதிகாரி பணிக்கு 580 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-
5. ரெயில்வேயில் 14,033 பணிகள்
ரெயில்வே துறையில் ஜூனியர் என்ஜினீயர், டெப்போ மெட்டீரியல் சூப்பிரண்டன்ட், கெமிக்கல் அண்ட் மெட்டலர்ஜிகல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப ரெயில்வே தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) விண்ணப்பம் கோரி உள்ளது.