மாவட்ட செய்திகள்

‘பெல்’ நிறுவனத்தில் 529 பயிற்சிப் பணிகள் + "||" + 529 training programs at BHEL

‘பெல்’ நிறுவனத்தில் 529 பயிற்சிப் பணிகள்

‘பெல்’ நிறுவனத்தில் 529 பயிற்சிப் பணிகள்
திருச்சி பெல் நிறுவனத்தில் 529 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:
பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL) எனப்படுகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இதன் கிளை நிறுவனங்கள் நாடு முழுவதும் பல இடங்களில் செயல்படுகிறது. தற்போது திருச்சியில் செயல்படும் பெல் நிறுவன கிளையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

மொத்தம் 529 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணிப்பிரிவு வாரியாக உள்ள காலியிடங்கள் விவரம் : பிட்டர் - 210, வெல்டர் - 115, டர்னர் - 28, மெஷினிஸ்ட் - 28, எலக்ட்ரீசியன் - 40, மெக்கானிக் மோட்டார் வெகிகிள் - 15, டீசல் மெக்கானிக் - 15, டிராப்ஸ்ட்மேன் - 15, புரோகிராம் சிஸ்டம் அட்மின் அசிஸ்டன்ட் - 40, கார்பெண்டர் - 10, பிளம்பர் - 10, எம்.எல்.டி. பேதாலஜி - 3.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 3-10-2018-ந் தேதியில் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி


10-ம் வகுப்பு தோ்ச்சிக்குப் பின், பிட்டர், வெல்டர், டர்னர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன், மோட்டார் வெகிகிள் மெக்கானிக் , டீசல் மெக்கானிக், கார்பெண்டர், பிளம்பர் போன்ற பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பேதாலஜி பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 13-9-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். சான்றிதழ் சரிபார்க்கும் பணி 24-9-2018-ந்தேதி முதல் நடைபெறுகிறது. இறுதிக்கட்ட விண்ணப்பதாரர் தேர்வு 9-10-2018 அன்று நடைபெறும். தகுதியானவர்கள் 15-10-2018 அன்று பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.bheltry.co.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசு துறைகளில் மொழிபெயர்ப்பாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு
மத்திய அரசு துறைகளில் மொழி பெயர்ப்பாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
2. வங்கி சிறப்பு அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வு : 1599 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது
பொதுத் துறை வங்கிகளின் சிறப்பு அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. மொத்தம் 1599 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
3. பிளஸ்-2 படித்தவர்களுக்கு கடற்படையில் பயிற்சியுடன் அதிகாரி பணி
கடற்படையில் பிளஸ்-2 படித்தவர்களை பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
4. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை : 400 பணியிடங்கள்
இந்திய எலக்ட்ரானிக்ஸ் கழக நிறுவனம் சுருக்கமாக ஈசில் (ECIL) என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஜூனியர் டெக்னிக்கல் ஆபீசர், ஜூனியர் கன்சல்டன்ட் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
5. முப்படை அதிகாரி பணிகளுக்கு 417 இடங்கள் : பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
இந்திய ராணுவ அகாடமிகளில் 417 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டப்படிப்பு படித்தவர்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-