மாவட்ட செய்திகள்

கடை பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு + "||" + The shop loot was broken and Rs. 30 thousand theft

கடை பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு

கடை பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு
ஸ்ரீமுஷ்ணத்தில் கடை பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஸ்ரீமுஷ்ணம், 

ஸ்ரீமுஷ்ணம் செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் செல்வம்(வயது 51). இவர் ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 10–ந்தேதி இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் முழுஅடைப்பு காரணமாக மதியம் 3 மணியளவில் கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடை ‌ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த செல்வம் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லாபெட்டியில் இருந்த ரூ.32 ஆயிரத்து 600–யை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திருட்டு நடந்த கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்பக்கூடல் பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்களின் சம்பளம் ரூ.14¼ லட்சம் கையாடல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு
ஆப்பக்கூடல் பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்களின் சம்பளம் ரூ.14¼ லட்சம் கையாடல் செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
2. புஞ்சைபுளியம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை–பணம் திருட்டு
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள சுங்ககாரன்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர் திருடிச்சென்றார்.
3. உசிலம்பட்டி அருகே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை காதலியை திருமணம் செய்ய பெற்றோர் சம்மதிக்காததால் பரிதாபம்
காதலியை திருமணம் செய்ய தன்னுடைய பெற்றோர் சம்மதிக்காததால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
4. திருவாடானை பாரதிநகர் பகுதியில் இரவு நேரங்களில் நீரேற்றம் செய்வதால் குடிநீர் திருட்டு நடவடிக்கை எடுக்க கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை
திருவாடானை பாரதிநகர் பகுதியில் இரவு நேரங்களில் நீரேற்றம் செய்வதால் குடிநீர் திருட்டு அதிகரித்து வருவதாகவும், அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
5. இளையான்குடி அருகே ஜல்லிக்கட்டு: காளைகளை விடுவதில் 2 கிராம மக்கள் மோதல்– போலீஸ் தடியடி 20 பேர் கைது
இளையான்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது காளைகளை விடுவதில் 2 கிராமமக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.