மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.64 உயர்வு டீசல் விலையும் ரூ.1.75 அதிகரிப்பு + "||" + In Namakkal Petrol price per liter Rs .1.64 rise The diesel price is Rs 1.75 a liter

நாமக்கல்லில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.64 உயர்வு டீசல் விலையும் ரூ.1.75 அதிகரிப்பு

நாமக்கல்லில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.64 உயர்வு டீசல் விலையும் ரூ.1.75 அதிகரிப்பு
நாமக்கல்லில் ஒரே வாரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.64-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.75-ம் அதிகரித்து உள்ளது.
நாமக்கல்,

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பை பொதுத்துறை ஆயில் நிறுவனங்களிடம் ஒப்படைத்து உள்ளது. இந்த ஆயில் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றை காரணம் காட்டி கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை ‘கிடுகிடு’ என உயர்த்தி வருகிறது.

இந்த விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் அவற்றின் மீதான வரியை குறைக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

நாமக்கல் நகரை பொறுத்தவரையில் கடந்த 5-ந் தேதி ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.82.98-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.77.70-க்கும், பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.84.62-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரே வாரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.64-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.75-ம் உயர்ந்து உள்ளது.

இந்த விலை உயர்வால் தினசரி இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்வோர் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் லாரி உரிமையாளர்களும் வாடகையை நிர்ணயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

எனவே ராக்கெட் வேகத்தில் ஏறும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அவற்றின் மீதான வரியை குறைக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இல்லை எனில் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விநாயகர் சதுர்த்தியையொட்டி கடலூரில் பூக்கள் விலை கிடு கிடு உயர்வு
விநாயகர் சதுர்த்தியையொட்டி கடலூரில் பூக்களின் விலை கிடு கிடு வென உயர்ந்தது. ஒருகிலோ மல்லிகை பூ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
2. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச பிரச்சினைகளே காரணம் - மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச பிரச்சினைகளே காரணம் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
3. டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: ரிக் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் ரூ.1 கோடி வருவாய் இழப்பு
டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ரிக் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ரூ.1 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சங்க நிர்வாகிகள் கூறினர்.
4. பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி - பள்ளி பஸ் கட்டணம் ரூ.75 உயருகிறது
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மும்பையில் பள்ளி பஸ் கட்டணத்தில் ரூ.75 உயர்த்த பள்ளி பஸ் உரிமையாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்து உள்ளது.
5. கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு
கேரளா மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு உயிரிழந்தவரின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது. #KeralaFloods