மாவட்ட செய்திகள்

குளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில் இடித்து அகற்றம் + "||" + The temple was demolished and demolished

குளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில் இடித்து அகற்றம்

குளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில் இடித்து அகற்றம்
சிதம்பரம் அருகே குளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கோவிலை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
சிதம்பரம், 

சிதம்பரம் அருகே பள்ளிப்படை கிராமத்தில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த, உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று காலை சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் தாசில்தார் தமிழ்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கம் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அந்த குளத்தின் உள்ளே விநாயகர் கோவில் ஒன்றை தனிநபர் ஒருவர் கட்டி, அதை சுற்றிலும் மதில் சுவரையும் கட்டி வைத்து இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து பொக்லைன் எந்திரம் அங்கு வரவழைக்கப்பட்டு, அதன் மூலம் கோவில் மற்றும் மதில் சுவரை வருவாய்த்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர். இந்த சம்பவத்தின் போது அங்கு அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில், சிதம்பரம் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. கோத்தகிரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடக்கம்
கோத்தகிரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கி உள்ளது.
2. கூடலூர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை தோட்டம்; வருவாய் துறையினர் மீட்டனர்
கூடலூர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை தோட்டம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர்.
3. திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் 50–க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோவிலின் வெளிக்குளத்தை ஒட்டிய பகுதியில் ஆக்கிரமித்து இருந்த ஏராளமான கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.
4. நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்; அரசு முதன்மை செயலாளர் அறிவுறுத்தல்
நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று அரசு முதன்மை செயலாளர் கோபால் அறிவுறுத்தியுள்ளார்.
5. முதுனாள் கிராமம் அருகே ஊருணி வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பால் விவசாய நிலங்கள் பாதிப்பு
ராமநாதபுரத்தை அடுத்துள்ள முதுனாள் கிராமம் அருகே ஊருணிக்கு தண்ணீர் செல்லும் வரத்துக்கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை உடனடியாக அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.