மாவட்ட செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய லாரி டிரைவர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது + "||" + Larry Driver, who was pregnant with the girl, was detained in the 'Pokso' Act

சிறுமியை கர்ப்பமாக்கிய லாரி டிரைவர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய லாரி டிரைவர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது
செய்யாறு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய லாரி டிரைவர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
செய்யாறு,

லாரி டிரைவர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுகா பில்லாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம் (வயது 35), லாரி டிரைவர். இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது உறவினர் வீட்டில் தனிமையில் இருந்த 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் பயந்து போன சிறுமி நடந்தவற்றை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட விநாயகம் தொடர்ந்து பலமுறை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார்.

இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் மகளிடம் கேட்டபோது அவர் நடந்தவற்றை கூறினார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் விநாயகத்திடம் சென்று தனது மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டனர். அதற்கு விநாயகம், திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

இதையடுத்து செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விநாயகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் பிரமுகர் கொலையில் கைதான கூட்டாளியுடன் ரவுடி டிராக் சிவா சிறையில் அடைப்பு
புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் கொலையில் கைதான ரவுடி டிராக் சிவா, அவரது கூட்டாளியுடன் சிறையில் அடைக்கப்பட்டார்.
2. 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சத்துணவு அமைப்பாளர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது
தஞ்சை அருகே 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சத்துணவு அமைப்பாளரை ‘போக்சோ’ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
3. ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் பிரபல ரவுடி கூட்டாளியுடன் கைது
ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் பிரபல ரவுடி கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். இருவரும் தப்பி ஓடும்போது தவறி விழுந்ததில் கால் முறிந்தது.
4. கோவில் உண்டியலை உடைத்து திருடிய வாலிபர் கைது
கறம்பக்குடி அருகே கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை உடனே கைது செய்ய வேண்டும் - த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி
எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று கோபியில் த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.