மாவட்ட செய்திகள்

கடல் முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி மீனவர்கள் திடீர் சாலை மறியல் + "||" + Ocean ice cream Turvara Fishermen scream road

கடல் முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி மீனவர்கள் திடீர் சாலை மறியல்

கடல் முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி மீனவர்கள் திடீர் சாலை மறியல்
கடல் முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி புதுச்சேரியில் மீனவர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,

புதுவை தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் மணல் திட்டுகள் மீண்டும் உருவாகியுள்ளன. இதன் காரணமாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் விசைப் படகுகள் இந்த மணல் திட்டுகளில் சிக்கி சேதமடைந்து வருகின்றன.

எனவே மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் நேற்று முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி மரப்பாலம் சந்திப்பில் மீனவர்கள் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குறைந்த அளவு மீன்கள் கிடைத்ததால் பாம்பன் மீனவர்கள் ஏமாற்றம்
பாம்பன் மீனவர்களுக்கு குறைந்த அளவில் மீன்கள் கிடைத்ததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
2. தஞ்சை மாவட்டத்தில் 13-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் மீன்கள் விலை கடும் உயர்வு
தஞ்சை மாவட்டத்தில் 13-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
3. மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பிய மீனவர்கள்
கடல் நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக போதிய மீன்கள் கிடைக்காமல் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பி வருகின்றனர்.
4. தமிழக மீனவர்கள் 6 பேரை ஈரான் கடற்படை சிறைபிடித்தது
துபாயில் மீன்பிடி தொழில் செய்து வந்த தமிழக மீனவர்கள் 6 பேரை ஈரான் கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
5. துபாய் கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 6 பேரை ஈரான் கடற்படை சிறைபிடித்தது
எல்லைதாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்கள் 6 பேரை ஈரான் கடற்படையினர் கைது செய்து சிறைபிடித்து சென்றனர்.