மாவட்ட செய்திகள்

5,345 பேர் வாக்காளர்களாக சேர விண்ணப்பம் + "||" + The application to join 5,345 voters

5,345 பேர் வாக்காளர்களாக சேர விண்ணப்பம்

5,345 பேர் வாக்காளர்களாக சேர விண்ணப்பம்
மாவட்டம் முழுவதும் நடந்த சிறப்பு முகாமில் 5,345 பேர் வாக்காளர்களாக சேர விண்ணப்பித்துள்ளனர்.
சிவகங்கை, 

கலெக்டர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ந்தேதி வெளியிடப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் 11 லட்சத்து 2 ஆயிரத்து 399 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட 11 ஆயிரத்து 751 பெண்கள் அதிகமாக உள்ளனர். இந்தநிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள வசதியாக சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி செப்டம்பர் 1-ந்தேதி முதல் வருகிற ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 9-ந்தேதி வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்றது. இதில் காரைக்குடி தொகுதியில் புதிய வாக்காளர்களாக சேர 1,035 பேரும், நீக்கம் செய்ய 20 பேரும், திருத்தத்திற்கு 143 பேரும், தொகுதிக்குள் இடமாறுதல் செய்ய 115 பேரும் என மொத்தம் 1,313 பேர் விண்ணப்பித்தனர்.

திருப்பத்தூர் தொகுதியில் புதிய வாக்காளர்களாக சேர்க்க 1,518 பேரும், நீக்கம் செய்ய 12 பேரும், திருத்தம் செய்ய 139 பேரும், தொகுதிக்குள் இடமாறுதல் செய்ய 62 பேரும் என மொத்தம் 1,731 பேர் விண்ணப்பித்தனர். இதேபோன்று சிவகங்கை தொகுதியில் புதிய வாக்காளர்களாக சேர 1,354 பேரும், நீக்கம் செய்ய 16 பேரும், திருத்தத்திற்கு 135 பேரும், தொகுதிக்குள் இடமாறுதல் செய்ய 67 பேரும் என மொத்தம் 1,572 பேர் விண்ணப்பித்தனர். மானாமதுரை(தனி) தொகுதியில் புதிய வாக்காளர்களாக சேர்க்க 1,438 பேரும், நீக்கம் செய்ய 35 பேரும், திருத்தம் செய்ய 214 பேரும், தொகுதிக்குள் இடமாறுதல் செய்ய 70 பேரும் என மொத்தம் 1,757 பேர் விண்ணப்பித்தனர்.

மாவட்டம் முழுவதும் புதிய வாக்காளர்களாக சேர்க்க 5 ஆயிரத்து 345 பேரும், நீக்கம் செய்ய 83 பேரும், திருத்தம் செய்ய 631 பேரும், தொகுதிக்குள் இடமாறுதல் செய்ய 314 என மொத்தம் 6 ஆயிரத்து 373 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டத்தில் காலியாக உள்ள 153 அங்கன்வாடி மைய பணியிடங்களுக்கு 2,500 பேர் விண்ணப்பம்
திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 153 அங்கன்வாடி மைய பணியிடங்களுக்கு 2,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். முதுகலை பட்டதாரிகளும் வேலையில் சேர ஆர்வமாக விண்ணப்பம் செய்து உள்ளனர்.
2. இறுதி பட்டியல் வெளியீடு: அரியலூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 5 ஆயிரத்து 685 வாக்காளர்கள்
அரியலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 5 லட்சத்து 5 ஆயிரத்து 685 வாக்காளர்கள் உள்ளனர்.
3. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: குமரி மாவட்டத்தில் 14¾ லட்சம் வாக்காளர்கள் பெண்களை விட 14,239 ஆண்கள் அதிகம்
குமரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 14¾ லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். பெண்களை விட 14,239 ஆண் வாக்காளர்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளனர்.
4. இறுதி பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 22 லட்சத்து 21 ஆயிரத்து 674 வாக்காளர்கள்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை 22 லட்சத்து 21 ஆயிரத்து 674 ஆகும்.
5. இறுதி பட்டியல் வெளியீடு: கரூர் மாவட்டத்தில் 8,48,189 வாக்காளர்கள்
இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் அன்பழகன் வெளியிட்டார். கரூர் மாவட்டத்தில் 8,48,189 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...