மாவட்ட செய்திகள்

நெல்லையில்இம்மானுவேல் சேகரன் படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவிப்பு + "||" + Tirunelveli Immanuel Sekaran film Dressed up in Congress evening

நெல்லையில்இம்மானுவேல் சேகரன் படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவிப்பு

நெல்லையில்இம்மானுவேல் சேகரன் படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவிப்பு
நெல்லையில் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, அவரது படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நெல்லை, 

நெல்லையில் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, அவரது படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்

இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

அந்த படத்துக்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் சங்கரபாண்டியன், எஸ்.கே.எம்.சிவகுமார், முன்னாள் எம்.பி. ராமசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம்

பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளைநகரில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் கட்சி அலுவலகத்தில் இம்மானுவேல்சேகரன், பாரதியார் உருவப்படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தன. இந்த படங்களுக்கு தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் மாநில பொதுச்செயலாளர் நெல்லையப்பன், மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், தமிழர் தேசிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வியனரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை அருகே உள்ள வேப்பங்குளத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த இம்மானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு, மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.