மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் அருகே மரத்தில் அரசு பஸ் மோதி விபத்து - 7 பேர் படுகாயம் + "||" + A bus crashed into a tree near Tirupattur - 7 people were injured

திருப்பத்தூர் அருகே மரத்தில் அரசு பஸ் மோதி விபத்து - 7 பேர் படுகாயம்

திருப்பத்தூர் அருகே மரத்தில் அரசு பஸ் மோதி விபத்து - 7 பேர் படுகாயம்
திருப்பத்தூர் அருகே மரத்தில் அரசு பஸ் மோதி 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பத்தூர்,

கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி அரசு பஸ் நேற்று புறப்பட்டது. அந்த பஸ்சை டிரைவர் பாலாஜி (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். கந்திலியை அடுத்த தாதங்குட்டை என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தபோது, முன்னே மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஊருக்குள் செல்லும் சாலையை நோக்கி மோட்டார் சைக்கிளை திடீரென திருப்பினார்.

அதனால் மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பஸ்சை வளைத்தார். அப்போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் மோதியது.

இதில் பஸ்சில் பயணம் செய்த பாரண்டப்பள்ளியை சேர்ந்த விஜயகுமார் (வயது 70), அசோக்குமார் (31), பஸ் கண்டக்டர் வெங்காயப்பள்ளியை சேர்ந்த ராமலிங்கம் (45), விஷமங்கலத்தை சேர்ந்த முருகன் (40) உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்கு பிறகு டிரைவர் பாலாஜி உள்பட 3 பேர் வீடு திரும்பினர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக மேலாளர் ஜெயசீலன் கந்திலி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தனியார் பஸ் டிரைவரை அரசு பஸ் கண்டக்டர் கடித்ததால் பரபரப்பு
கும்பகோணம் பஸ் நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் தனியார் பஸ் டிரைவரை அரசு பஸ் கண்டக்டர் கடித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. ஆம்பூர் அருகே கன்டெய்னர் லாரி மீது மோதிய கார் கவிழ்ந்து 2 பேர் பலி
ஆம்பூர் அருகே கன்டெய்னர் லாரி மீது மோதிய கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
3. அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
ராமநாதபுரம் அருகே அரசு பஸ் மோதி தொழிலாளி பலியானார். அவரது உடலை பிணவறைக்கு கொண்டு சென்ற போது ஏற்பட்ட தகராறில் ஆஸ்பத்திரி ஊழியர் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
4. காவேரிப்பட்டணம்: கிணற்றில் கார் பாய்ந்து 2 சிறுமிகள் பலி
காவேரிப்பட்டணம் அருகே கிணற்றில் கார் பாய்ந்து 2 சிறுமிகள் பலியானார்கள். 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
5. தெலுங்கானா மாநிலத்தில் கோர விபத்து: மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து 57 பேர் பலி
தெலுங்கானா மாநிலத்தில் அரசு பஸ் மலைப்பாதையில் கவிழ்ந்ததில் 36 பெண்கள் உள்பட 57 பேர் பரிதாபமாக இறந்தனர்.