மாவட்ட செய்திகள்

வேலூரில் தடையை மீறி நடந்த காங்கிரஸ் கட்சி ஊர்வலத்தில் தள்ளுமுள்ளு + "||" + The Congress party that is in violation of the ban in Vellore will be pushed into the procession

வேலூரில் தடையை மீறி நடந்த காங்கிரஸ் கட்சி ஊர்வலத்தில் தள்ளுமுள்ளு

வேலூரில் தடையை மீறி நடந்த காங்கிரஸ் கட்சி ஊர்வலத்தில் தள்ளுமுள்ளு
வேலூரில் நேற்று தடையை மீறி நடைபெற்ற காங்கிரஸ் கட்சி ஊர்வலத்தில் போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சிலரின் வேட்டிகள் அவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்,

மத்திய அரசு ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கலெக்டர் ராமனிடம் மனு கொடுக்க வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவில் அருகில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக செல்ல வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை முருகன் கோவில் அருகில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியினரும் அங்கு குவியத்தொடங்கினர். முன்னாள் எம்.பி. முனிரத்தினம், முன்னாள் எம்.எல்.ஏ. விஷ்ணுபிரசாத், மாவட்ட தலைவர்கள் டீக்காராமன், பிரபு உள்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

ஆனால் அவர்களை ஊர்வலமாக செல்ல போலீசார் அனுமதிக்க வில்லை. அதைத்தொடர்ந்து ஒவ்வொருவராக கலெக்டர் அலுவலகத்தை நோக்கி புறப்பட்டனர். காகிதப்பட்டறையில் சென்றபோது அட்டையில் விமானம் போன்று செய்து அதை வாகனத்தில் எடுத்து சென்றனர். அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஊர்வலமாக சென்றவர்களை இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், லோகநாதன் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக சென்றனர்.

அதைத்தொடர்ந்து அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியினரை விரட்டிச்சென்று போலீசார் கைது செய்தனர்.

கைதாக மறுத்தவர்களை குண்டுகட்டாக தூக்கிச்சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலருடைய வேட்டிகள் அவிழ்ந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஊர்வலத்தில் சென்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் மத்திய ஜெயில் வளாகத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் - அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் எச்சரிக்கை
வேலூர் மத்திய ஜெயில் வளாகத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் காணப்பட்டதால் ஜெயில் அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்தார்.
2. மலையில் இருந்து உருண்டு வந்த பாறைகள் உடைத்து அகற்றம் - நவீன கருவி மூலம் நடவடிக்கை
வேலூர் காகிதப்பட்டறை மலையில் இருந்து உருண்டு வந்த பாறைகளை நவீன கருவி மூலம் உடைத்து அப்புறப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
3. வேலூரில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் - 350 பேர் கைது
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 350 சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
4. வேலூர் அருகே மண் கடத்திய 7 பேர் கைது
வேலூர் அருகே மணல், மண் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. வேலூரில் சத்துணவு ஊழியர்கள் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
வேலூரில் சத்துணவு ஊழியர்கள் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.